ஏசாயா 44

Isaiah 44
அத்தியாயம் 44

தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல்

இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள். ஏசா 41:8எரே 30:10ரோம 11:5-6எபி 3:7-8எரே 4:7எரே 46:27-28சங் 105:6உபா 7:6-8 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே 1, பயப்படாதே. எரே 1:5ஏசா 43:1ஏசா 46:3-4ஏசா 44:24ஏசா 43:7ஏசா 49:1எபே 1:4ஏசா 41:10 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். யோவே 2:28அப் 2:17ஏசா 59:21யோவா 7:37-39நீதி 1:23வெளி 21:6அப் 2:39சகரி 12:10 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள். ஏசா 58:11சங் 1:3சங் 92:13-15எசேக் 17:5அப் 4:4சங் 137:1-2அப் 2:41-47அப் 5:14 ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் யெகோவாவுடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான். சகரி 13:91 பேது 2:92 கொரி 8:5உபா 26:17-19யாத் 13:9கலா 6:16நெகே 9:38மீகா 4:2

யெகோவாவைத் தவிர வேறொருவரும் இல்லை

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார். ஏசா 41:4ஏசா 43:10-11வெளி 1:8வெளி 22:13ஏசா 44:8ஏசா 45:5-6ஏசா 48:17ஏசா 48:12 ஆரம்பகாலத்து மக்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும். ஏசா 41:26ஏசா 41:22ஏசா 46:9-10ஏசா 45:21அப் 17:26உபா 32:8ஆதி 17:7-8ஏசா 41:4 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் 2 இல்லையே; ஒருவனையும் அறியேன். ஏசா 43:101 சாமு 2:2உபா 4:35உபா 4:39யோவா 10:30சங் 18:312 சாமு 22:32உபா 32:39 விக்கிரகங்களை உருவாக்குகிற அனைவரும் வீணர்கள்; அவர்களால் விரும்பப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஏசா 41:24எரே 10:14-15ஆப 2:18-20ஏசா 41:29சங் 97:71 கொரி 8:41 இராஜா 18:26-402 கொரி 4:4 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, சிலையை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? எரே 10:5ஆப 2:18அப் 19:261 கொரி 8:41 இராஜா 12:28தானி 3:1தானி 3:14ஏசா 41:29 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லோரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லோரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாகத் திகைத்து வெட்கப்படுவார்கள். ஏசா 42:17ஏசா 45:16ஏசா 1:29சங் 97:71 இராஜா 18:19-291 இராஜா 18:401 சாமு 5:3-71 சாமு 6:4-5 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான். ஏசா 40:19ஏசா 41:6-7ஏசா 46:6-7யாத் 32:4யாத் 32:8ஆப 2:13எரே 10:3-11 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்திற்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தினால் அதை வகுத்து, மனித சாயலாக மனிதரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான். நியாயாதி 17:4-5அப் 17:29உபா 4:16-18சங் 115:5-7ரோம 1:23உபா 27:15உபா 4:28யாத் 20:4-5 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருத மரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோக மரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். ஏசா 40:20ஆப 2:19ஓசி 4:12எரே 10:3-8 மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 2 நாளாக 25:14ஏசா 44:10ஏசா 45:20நியாயாதி 2:19வெளி 9:20 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை காப்பாற்றவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். ஏசா 45:201 இராஜா 18:26தானி 3:17தானி 3:29தானி 6:16தானி 6:20-22தானி 6:27ஏசா 36:19-20 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. ஏசா 6:9-102 கொரி 4:3-4யோவா 12:39-402 தெச 2:9-12எரே 5:21சங் 81:12நீதி 2:5-9மத் 13:14-15 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. உபா 27:151 இராஜா 11:51 இராஜா 11:72இராஜா 23:13உபா 32:46யாத் 7:23எசேக் 40:4ஓசி 7:2 அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். ஓசி 12:1யோபு 15:31சங் 102:9ரோம 1:282 தீமோ 2:13ஓசி 4:12ரோம 1:251 இராஜா 22:20-23 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் ஊழியக்காரன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசா 44:1-2ஏசா 49:15-16உபா 4:23ஏசா 43:1ஏசா 43:15ஏசா 46:8-9சகரி 10:9உபா 31:19-21 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். ஏசா 43:251 கொரி 6:20அப் 3:18-19ஏசா 43:11 பேது 1:18-19சங் 103:12ஏசா 55:7எரே 33:8 வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார். எபே 1:6-7வெளி 5:8-14சங் 69:34ஏசா 49:3எரே 51:48சங் 96:11-12சங் 98:7-8வெளி 19:1-6

எருசலேம் குடியேற்றப்படும்

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். ஏசா 42:5ஏசா 45:12ஏசா 54:5ஏசா 45:18ஏசா 44:2ஏசா 43:14ஏசா 51:13யோபு 9:8 நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர். சங் 33:10யோபு 5:12-142 சாமு 15:31எரே 50:361 கொரி 1:20-27ஏசா 47:12-14எரே 51:57ஏசா 29:14 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் பிரதிநிதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான இடங்களை எடுப்பிப்பவர். 1 இராஜா 18:36-38ஏசா 42:92 பேது 1:19-21அப் 2:25-28தானி 9:25ஏசா 60:10எரே 30:18எரே 33:7 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர். ஏசா 42:15எரே 50:38எரே 51:36ஏசா 11:15-16ஏசா 43:16ஏசா 51:15எரே 51:32சங் 74:15 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான். 2 நாளாக 36:22ஏசா 45:1தானி 10:1எஸ்றா 6:3-18ஏசா 45:13ஏசா 46:11ஏசா 63:11சங் 78:71-72