ஏசாயா 43

Isaiah 43
அத்தியாயம் 43

இஸ்ரவேலின் ஒரே இரட்சகர்

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். சங் 100:3ஏசா 43:7சகரி 13:9ஏசா 54:4-5தீத் 2:14வெளி 5:9ஏசா 45:3-4எபே 2:10 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது. ஏசா 41:10யோசு 1:9சங் 66:12சங் 23:4தானி 3:25-272 கொரி 12:9-10சங் 91:151 பேது 4:12-13 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய யெகோவா; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். ஏசா 60:16ஏசா 45:152 நாளாக 14:9-14ஏசா 49:26யாத் 20:2நீதி 21:18ஏசா 45:21யூதா 1:25 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன். உபா 7:6-81 பேது 2:9எரே 31:3வெளி 3:9ஆதி 12:2ஓசி 11:1யோவா 16:27உபா 32:9-14 பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன். உபா 30:3லூக் 13:29எசேக் 39:25-29ஏசா 49:12ஏசா 44:2ஏசா 60:1-11அப் 18:9-10எசேக் 36:24-27 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும், 2 கொரி 6:17-18எரே 3:14எரே 3:18-19கலா 3:26-29ஓசி 1:10-11ரோம 9:7-8ஏசா 18:7சங் 107:3 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன். எபே 2:10ஏசா 43:21எபே 1:121 பேது 2:9ரோம 9:23ஏசா 62:2-5ஏசா 43:1சங் 100:3 கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள். ஏசா 6:9எசேக் 12:22 கொரி 4:4-6உபா 29:2-4ஏசா 42:18-20எரே 5:21ஏசா 44:18-20 சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும். ஏசா 44:7-9ஏசா 46:10ஏசா 41:21-26ஏசா 41:1ஏசா 43:26யோவே 3:11சங் 50:11 இராஜா 18:21-24 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. ஏசா 41:4ஏசா 45:6ஏசா 46:8-9ஏசா 43:12அப் 1:8ஏசா 40:21-22ஏசா 44:6-8பிலி 2:7 நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. ஓசி 13:4ஏசா 44:6ஏசா 43:3ஏசா 45:21-22அப் 4:12வெளி 7:10-12ஏசா 12:2உபா 6:4 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார். உபா 32:12ஏசா 44:8சங் 81:9-10ஏசா 43:10ஏசா 37:20ஏசா 37:7ஏசா 46:9-10ஏசா 48:4-7 நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? ஏசா 14:27ஏசா 46:10சங் 90:2எபி 13:8யோவா 8:581 தீமோ 1:17உபா 32:39யோபு 9:12

தேவனுடைய இரக்கமும் இஸ்ரவேலின் உண்மையற்ற நிலை

நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார். ஏசா 23:13ஏசா 44:6எரே 51:24ஏசா 44:24எசேக் 27:29-36ஏசா 43:1ஏசா 43:3-4ஏசா 54:5-8 நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். ஆப 1:12ஏசா 43:1ஏசா 48:17எரே 51:5மத் 25:34சங் 74:12வெளி 3:7ஏசா 30:11 கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, ஏசா 43:2ஏசா 51:10சங் 77:19எரே 31:35ஏசா 51:15ஏசா 63:11-13நெகே 9:11சங் 106:9 இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது: யாத் 14:4-9ஏசா 1:31எசேக் 38:8-18சங் 118:12சங் 76:5-6வெளி 20:8-9யாத் 14:23-28யாத் 15:4 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். ஏசா 65:172 கொரி 3:101 நாளாக 16:12உபா 8:2ஏசா 46:9எரே 16:14-15உபா 7:18எரே 23:7-8 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். ஏசா 48:6ஏசா 42:92 கொரி 5:17வெளி 21:5ஏசா 41:18லூக் 3:4-5ஏசா 35:6-10எரே 31:22 நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும். ஏசா 41:17ஏசா 48:21ஏசா 49:101 பேது 2:9ஏசா 13:22யோவா 4:14வெளி 17:141 நாளாக 16:13 இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். 1 பேது 2:9எபி 13:151 கொரி 6:19-20சங் 102:18லூக் 1:74-751 கொரி 10:31ஏசா 61:3கொலோ 1:16 ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனம்சலித்துப்போனாய். மீகா 6:3மல்கி 3:14மல்கி 1:13யாக் 4:2-3எரே 10:25தானி 9:13ஓசி 14:1-2ஓசி 7:10-14 உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன். ஆமோ 5:25சகரி 7:5-6ஆமோ 5:21-22ஏசா 66:3எரே 7:22லேவி 2:1மல்கி 1:13-14மல்கி 1:6-8 நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். ஏசா 7:13எரே 6:20ஏசா 1:14எசேக் 6:9ஏசா 63:10மல்கி 2:13-17சங் 50:9-13சங் 95:10 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன். எபி 8:12மீகா 7:18-19எபி 10:17எரே 31:34ஏசா 1:18ஏசா 44:22சங் 25:7சங் 79:8-9 நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். ஏசா 1:18ஏசா 43:9ரோம 8:33சங் 141:2எரே 2:21-35ஏசா 41:1யோபு 40:7-8ரோம 10:3 உன் ஆதிதகப்பன் 1 பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள். ஏசா 28:7எரே 5:31எசேக் 16:3எசேக் 22:25-28புலம் 4:13-14அப் 5:17-18அப் 7:51ஓசி 4:6 ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன். எரே 24:9ஏசா 65:15சகரி 8:131 தெச 2:16உபா 28:15-20ஏசா 47:6புலம் 2:2சங் 79:4