கடின இருதயமுள்ள இஸ்ரவேல்
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், யெகோவாவுடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். எரே 4:2சங் 68:26உபா 6:13ஆதி 32:28ஏசா 1:10-14ஏசா 65:16எரே 5:2எரே 7:9-10 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் யெகோவா என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாக இருக்கிறார்கள். மீகா 3:11ஏசா 10:20ஏசா 52:1ரோம 2:17எரே 21:2மத் 27:531 சாமு 4:3-5தானி 9:24 ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை ஆரம்பம்முதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளை உடனடியாகச் செய்தேன், அவைகள் நடந்தன. ஏசா 42:9ஏசா 41:22யோசு 21:45ஏசா 44:7-8ஏசா 45:21ஏசா 43:9ஏசா 46:9-10யோசு 23:14-15 நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன். அப் 7:51யாத் 32:9சகரி 7:11-12நீதி 29:1எசேக் 3:4-9ரோம 2:5எரே 19:15எரே 5:3 ஆகையால்: என் சிலை அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த உருவமும், நான் வார்ப்பித்த சிலையும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன். ஏசா 48:3லூக் 1:70அப் 15:18எரே 44:15-18ஏசா 42:8-9ஏசா 44:7ஏசா 46:10 அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன். வெளி 4:1ஏசா 42:9ரோம 16:25-26ஏசா 43:19ஏசா 43:8-10யோவா 15:15மத் 10:271 கொரி 2:9 அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை. நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் செய்வாய் என்பதையும், தாயின் கர்ப்பத்திலிருந்தே நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன். சங் 58:3ஓசி 5:7எசேக் 16:3-5ஏசா 42:19-20எரே 6:10யோவா 12:39-40மல்கி 2:11மத் 13:13-15 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னை அழிக்காதபடி நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாக இருப்பேன். சங் 79:9ஏசா 37:35சங் 106:8சங் 143:11சங் 78:381 சாமு 12:22தானி 9:17-19எசேக் 20:14 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். 1 பேது 4:12நீதி 17:3யோபு 23:10எபி 12:10-11சங் 66:101 பேது 1:7எரே 9:7மல்கி 3:2-3 என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன். ஏசா 42:8எசேக் 20:9எசேக் 20:14ஏசா 37:351 சாமு 12:22எசேக் 20:22ஏசா 43:25எரே 14:7
இஸ்ரவேல் விடுவிக்கப்படுதல்
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. ஏசா 41:4வெளி 1:8வெளி 22:13ஏசா 44:6வெளி 17:14ரோம 8:28ஏசா 43:11ஏசா 55:3 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். எபி 1:10-12சங் 102:25யாத் 20:11ஏசா 45:18ஏசா 40:26ஏசா 42:5ஏசா 40:12சங் 119:89-91 நீங்களெல்லோரும் கூடிவந்து கேளுங்கள்; யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்? ஏசா 43:9ஏசா 13:17-18எரே 50:21-29ஏசா 13:4-5ஏசா 41:22ஏசா 45:20-21ஏசா 46:10-11எரே 51:20-24 நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரச்செய்தேன்; அவன் வழி வாய்க்கும். யோசு 1:8ஏசா 45:1-2சங் 45:4எசேக் 1:2 நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு இரகசியமாகப் பேசவில்லை; அது உண்டான காலத்திலிருந்தே அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ யெகோவாவாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். யோவா 18:20யோவா 20:21-22ஏசா 45:19ஏசா 61:1-3யோவா 3:34ஏசா 11:1-5லூக் 4:18ஏசா 48:3-6 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே. சங் 32:8சங் 25:12யோபு 22:21-22உபா 8:17-18ஏசா 30:20சங் 73:24ஏசா 54:13யோபு 36:22 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி கடலின் அலைகளைப்போலும் இருக்கும். உபா 5:29ஏசா 66:12சங் 119:165சங் 81:13-16உபா 32:29ஏசா 45:8லூக் 19:41-42சங் 36:8 அப்பொழுது உன் சந்ததி மணலைப் போலவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் துகள்களைப் போலவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். ஏசா 10:22ஆதி 22:17ஓசி 1:10எரே 33:22ரோம 9:271 இராஜா 9:7ஆதி 13:16ஏசா 14:22 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; யெகோவா தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாகக் கூறிப் பிரபலப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரவரை வெளிப்படுத்துங்கள் என்கிறார். ஏசா 52:9எரே 50:8எரே 51:45எரே 51:6வெளி 18:4சகரி 2:6-7யாத் 15:1-21யாத் 19:4-6 அவர் அவர்களை வனாந்திரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகம் இருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கச்செய்தார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது. ஏசா 43:19-20சங் 105:41ஏசா 41:17-18யாத் 17:6ஏசா 35:6-7எண் 20:11சங் 78:20ஏசா 30:25 துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார். ஏசா 57:21யோபு 15:20-24லூக் 19:42ரோம 3:17