தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல்.
மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? ஏசா 11:3-5சங் 57:1உபா 16:18-19சங் 72:1-42 நாளாக 19:6-72 சாமு 23:3உபா 1:15-16எரே 23:5-6
மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; ஏசா 10:1சங் 94:20பிரச 3:16எசேக் 22:27மீகா 3:1-3எசேக் 22:12ஏசா 26:7ஏசா 59:4-6
பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; சங் 51:5ஏசா 48:8நீதி 22:15எபே 2:3யோபு 15:14சங் 22:10ஏசா 46:3
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. யாக் 3:8சங் 140:3பிரச 10:11எரே 8:17ரோம 3:13உபா 32:33ஏசா 11:8யோபு 20:14
பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள். எரே 8:17உபா 18:11ஏசா 19:3
தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; சங் 3:7ஓசி 5:14யோபு 29:17யோபு 4:10-11மீகா 5:8சங் 10:15சங் 17:12எசேக் 30:21-26
யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; யோசு 7:5சங் 112:10யாத் 15:15ஏசா 13:7யோசு 2:9-11சங் 64:32 சாமு 17:10சங் 22:14
அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது
அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; யோபு 3:16பிரச 6:3யாக் 1:10சங் 37:35-36மத் 24:35
பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே நீதி 10:25பிரச 7:6சங் 118:12ஏசா 17:13எரே 23:19ஏசா 40:24யோபு 18:18யோபு 20:5-29
பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; சங் 68:23சங் 91:8நீதி 11:10வெளி 11:17-18உபா 32:43சங் 64:10சங் 107:42நியாயாதி 5:31
அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், ஏசா 3:10சங் 67:4சங் 33:18சங் 64:9மல்கி 2:17மல்கி 3:14ரோம 2:5சங் 98:9
மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.