நீதிமொழிகள் 22

Proverbs 22
அத்தியாயம் 22

சமுதாய வாழ்வின் விதிகள்

திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பிரச 7:1லூக் 10:201 இராஜா 1:47அப் 7:10பிலி 4:3எபி 11:39

பொன் வெள்ளியைவிட தயையே நலம்.

செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; யோபு 31:151 சாமு 2:7நீதி 14:31யோபு 34:19நீதி 29:13யாக் 2:2-51 கொரி 12:21சங் 49:1-2

அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; நீதி 27:12நீதி 14:16நீதி 29:11 தெச 5:2-6எபி 11:7நீதி 7:7நீதி 7:22-23யாத் 9:20-21

பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மத் 6:33யாக் 4:10சங் 34:9-10நீதி 21:21சங் 112:1-3ஏசா 57:15ஏசா 33:6யாக் 4:6

மகிமையும் ஜீவனும் ஆகும்.

மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; நீதி 16:171 யோவா 5:18யூதா 1:20-21நீதி 15:19யோபு 18:8நீதி 13:15நீதி 19:16சங் 18:26-27

தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன்

அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.

பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; உபா 6:7எபே 6:42 தீமோ 3:15ஆதி 18:19உபா 4:9சங் 78:3-61 சாமு 1:281 சாமு 2:26

அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; 2இராஜா 4:1மத் 18:25நீதி 22:16நீதி 14:31நீதி 18:23யாக் 2:6நீதி 22:22யாக் 5:1

கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; கலா 6:7-8யோபு 4:8ஏசா 30:31ஓசி 10:13சங் 125:3நீதி 14:3ஓசி 8:7ஏசா 10:5

அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.

கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; நீதி 19:17எபி 6:101 தீமோ 6:18-19அப் 20:351 பேது 4:9எபி 13:16லூக் 14:13சங் 112:9

அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

பரியாசக்காரனைத் துரத்திவிடு; 1 கொரி 5:131 கொரி 5:5-6நீதி 26:20-21ஆதி 21:9-10மத் 18:17நெகே 13:28நீதி 18:6நீதி 21:24

அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; மத் 5:8நீதி 16:13நீதி 14:35சங் 101:6சங் 45:2தானி 6:20-23எஸ்றா 7:6-11தானி 2:46-49

ராஜா அவனுக்கு நண்பனாவான்.

யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; 2 தீமோ 3:8-92 நாளாக 16:9அப் 13:8-122 தெச 2:8அப் 12:23-24யோபு 5:12-13அப் 5:39அப் 8:9-12

துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

வெளியிலே சிங்கம், நீதி 26:13-16எண் 13:32-33நீதி 15:19

வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; பிரச 7:26நீதி 23:27நீதி 6:24-29நெகே 13:26நீதி 7:5-27நியாயாதி 16:20-21நீதி 2:16-19உபா 32:19

யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; நீதி 13:24நீதி 29:15நீதி 19:18நீதி 23:13-14எபி 12:10-11நீதி 29:17எபே 2:3சங் 51:5

அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், நீதி 22:22-23யாக் 2:13சங் 12:5யாக் 5:1-5லூக் 14:12-14லூக் 6:33-35நீதி 14:31நீதி 28:3

தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.

ஞானிகளுடைய சொல்

உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, நீதி 23:12சங் 90:12பிரச 7:25நீதி 2:2-5நீதி 3:1மத் 17:5நீதி 1:3பிரச 8:16

என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

அவைகளை உன் உள்ளத்தில் காத்து, எரே 15:16நீதி 2:10நீதி 8:6யோவா 7:38நீதி 10:21நீதி 15:7சங் 119:103எபி 13:15

அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது,

அது இன்பமாக இருக்கும்.

உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, சங் 62:8ஏசா 12:2நீதி 3:51 பேது 1:21ஏசா 26:4எரே 17:7

இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், 2 பேது 1:19-21நீதி 8:62 தீமோ 3:15-17சங் 12:6ஓசி 8:12

நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும்,

ஆலோசனையையும், 1 பேது 3:15லூக் 1:3-41 யோவா 5:13யோவா 20:31

ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?

ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சகரி 7:10மல்கி 3:5யாத் 23:6நீதி 22:16யோபு 29:12-16யோபு 31:16யோபு 31:21எசேக் 22:29

சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.

யெகோவா அவர்களுக்காக வழக்காடி, சங் 12:5சங் 140:12எரே 51:36நீதி 23:111 சாமு 25:39சங் 35:10சங் 43:1எரே 50:34

அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; நீதி 29:222 கொரி 6:14-17நீதி 21:24

கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.

அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, 1 கொரி 15:33நீதி 13:20சங் 106:35

உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.

உறுதியளித்து உடன்பட்டு, நீதி 11:15நீதி 17:18நீதி 6:1-5நீதி 27:13

கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீதி 20:162இராஜா 4:1யாத் 22:26-27

நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே. உபா 19:14உபா 27:17நீதி 23:10யோபு 24:2

தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், 1 இராஜா 11:28மத் 25:21நீதி 12:24பிரச 9:10மத் 25:23நீதி 10:4ஆதி 41:46ரோம 12:11

அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல்,

ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.