நீதிமொழிகள் 15

Proverbs 15
அத்தியாயம் 15

வாழ்வின் ஒழுங்குமுறைகள்

சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; நீதி 10:12நீதி 25:15நீதி 15:18நீதி 29:22நீதி 28:25நியாயாதி 8:1-31 இராஜா 12:13-161 சாமு 25:10-13

கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; நீதி 12:23நீதி 15:28நீதி 13:16பிரச 10:12-13சங் 45:1ஏசா 50:4நீதி 15:23நீதி 16:23

மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, எபி 4:13எரே 16:17எரே 23:242 நாளாக 16:9நீதி 5:21யோபு 31:4யோபு 34:21-22எரே 32:19

நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.

ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். நீதி 16:24நீதி 12:18நீதி 18:8மல்கி 4:2நீதி 3:18நீதி 18:14வெளி 2:7நீதி 26:22

மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; நீதி 15:31-32நீதி 13:18நீதி 13:1நீதி 19:201 நாளாக 28:20தீத் 2:151 நாளாக 22:11-131 நாளாக 28:9

கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; நீதி 8:21நீதி 10:22நீதி 21:20சங் 112:3எபி 11:26நீதி 16:8சங் 37:16பிரச 4:6

துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.

ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மத் 12:34எபே 4:29யாக் 3:6நீதி 10:20-21அப் 18:9-10பிரச 12:9-10மத் 10:27மத் 28:18-20

மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.

துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதி 15:291 நாளாக 29:17நீதி 21:27ஏசா 1:10-15எரே 6:20நீதி 28:9ஏசா 61:8யோவா 4:24

செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 தீமோ 6:11நீதி 21:21ஆப 1:13ஓசி 6:3எரே 44:4மத் 7:132 தீமோ 2:22ஏசா 26:7

நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; நீதி 12:1யோவா 3:20நீதி 10:17நீதி 13:1யோவா 7:71 இராஜா 18:171 இராஜா 21:201 இராஜா 22:8

கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, சங் 44:21எபி 4:13சங் 139:82 நாளாக 6:30யோபு 26:6வெளி 2:231 சாமு 16:7எரே 17:10

மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?

பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஆமோ 5:10யோபு 21:142 தீமோ 4:3நீதி 9:7-8யோவா 7:72 நாளாக 18:7யோவா 3:18-21நீதி 15:10

ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; நீதி 17:22யோவா 14:1நீதி 12:25நீதி 18:14நீதி 15:152 கொரி 7:102 கொரி 2:72 கொரி 1:12

மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; நீதி 9:9ஏசா 30:10நீதி 18:152 பேது 3:18அப் 17:11நீதி 1:51 இராஜா 3:6-12ஓசி 12:1

மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.

சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; 2 கொரி 6:10ரோம 12:12நீதி 15:13நீதி 17:22ரோம 5:11ரோம 5:2-31 பேது 1:6-82 கொரி 1:5

மனரம்மியமோ நிரந்தர விருந்து.

சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, நீதி 16:8சங் 37:16பிரச 5:10-121 தீமோ 6:6நீதி 28:6நீதி 10:22பிரச 2:18-23பிரச 2:10-11

யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, நீதி 17:1நீதி 21:191 யோவா 4:16மத் 22:4பிலி 2:1சங் 133:1-3லூக் 15:23

சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீதி 15:1நீதி 26:21மத் 5:9நீதி 29:22நீதி 14:29பிரச 10:4யாக் 1:19-20நீதி 10:12

நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; ஏசா 35:8நீதி 22:5ஏசா 30:21நீதி 22:13நீதி 26:13எண் 14:1-3நீதி 8:9சங் 27:11

நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; நீதி 29:3நீதி 10:1நீதி 23:15-161 இராஜா 1:481 இராஜா 5:7லேவி 19:3நீதி 23:221 இராஜா 2:9

மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.

மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; எபே 5:15நீதி 10:23நீதி 14:16யாக் 3:13யோபு 28:28நீதி 11:12நீதி 14:9நீதி 26:18-19

புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.

ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; நீதி 11:14நீதி 20:18பிரச 8:6

ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏசா 50:4எபே 4:29நீதி 25:11-12நீதி 12:14நீதி 16:13நீதி 24:261 சாமு 25:32-33பிரச 3:1

ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, கொலோ 3:1-2சங் 16:11மத் 7:14எரே 21:8யோவா 14:6பிலி 3:20நீதி 23:14சங் 139:24

விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.

அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; சங் 146:9சங் 68:5-6உபா 10:17-18நீதி 12:7நீதி 14:11நீதி 23:10தானி 5:20ஏசா 2:12

விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

துன்மார்க்கர்களுடைய நினைவுகள் நீதி 6:16-19எரே 4:14மத் 12:34-37நீதி 15:23சங் 19:14சங் 37:30-31சங் 45:1மத் 15:19

யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;

சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; யாத் 23:8நீதி 1:19எரே 17:11உபா 16:19ஏசா 33:15-16நீதி 11:29யாத் 18:21யோசு 7:24-25

லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; 1 பேது 3:15பிரச 5:2நீதி 29:11யாக் 3:6-8நீதி 16:23நீதி 15:2பிரச 10:12-14பிரச 5:6

துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; யோவா 9:31சங் 145:18-191 பேது 3:12நீதி 15:8சங் 34:15-17யாக் 5:16-18எபே 2:12-13ரோம 8:26-27

நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; லூக் 2:10-19ஏசா 58:11நீதி 25:25வெளி 22:5வெளி 21:23எஸ்றா 9:8நீதி 17:22பிரச 11:7

நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது நீதி 15:5நீதி 25:12யோவா 15:3-4நீதி 19:20நீதி 9:8-9ஏசா 55:3நீதி 1:23நீதி 13:20

ஞானிகளிடத்திலே தங்கும்.

புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; நீதி 1:24-33வெளி 3:19நீதி 1:7ஏசா 1:5எரே 5:3நீதி 18:15நீதி 8:33-36உபா 21:18

கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 பேது 5:5நீதி 18:12நீதி 1:7யாக் 4:10சங் 34:11சங் 111:10யோபு 28:28நீதி 25:6-7

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.