மதியீனன்
கோடைக்காலத்திலே உறைந்த பனியும், நீதி 19:10நீதி 28:161 சாமு 12:17-18எஸ்த 4:6சங் 12:8சங் 15:4பிரச 10:5-7எஸ்த 3:1-15
அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல,
மூடனுக்கு மகிமை தகாது.
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், எண் 23:8நெகே 13:2சங் 109:282 சாமு 16:12உபா 23:4-51 சாமு 17:43நீதி 27:81 சாமு 14:28-29
தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும்,
காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.
குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், நீதி 10:131 கொரி 4:21சங் 32:92 கொரி 10:62 கொரி 13:2நியாயாதி 8:5-7நீதி 17:10நீதி 19:25
மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; நீதி 26:51 பேது 3:9யூதா 1:91 இராஜா 12:14நீதி 17:141 இராஜா 12:162 சாமு 19:41-43நியாயாதி 12:1-6
கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.
மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; ரோம 12:16மத் 16:1-4நீதி 3:7யோவா 8:7யோவா 9:26-33லூக் 12:13-21மத் 21:23-27நீதி 26:12
கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான்.
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் நீதி 10:26நீதி 25:13நீதி 13:17எண் 13:31
தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், நீதி 26:9நீதி 17:7சங் 64:8மத் 7:4-5சங் 50:16-21லூக் 4:23
அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். நீதி 26:1நீதி 30:22நீதி 19:10
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி நீதி 23:35
வெறியன் கையில் அகப்பட்ட முள்.
பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, நீதி 11:31ரோம 2:6
மூடனையும் வேலைவாங்குகிறான்,
மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.
நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, 2 பேது 2:22மத் 12:45யாத் 8:15
மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 கொரி 3:18-19நீதி 29:20நீதி 26:5நீதி 28:11ரோம 12:16வெளி 3:17லூக் 18:11மத் 21:31
அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.
வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். நீதி 22:13நீதி 19:15நீதி 15:19
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, எபி 6:12நீதி 12:24நீதி 12:27நீதி 24:33நீதி 6:9-10
சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து நீதி 19:24
அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 பேது 3:15நீதி 26:12நீதி 12:15
சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நீதி 20:32 தீமோ 2:23-24நீதி 18:6லூக் 12:14நீதி 17:11
நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.
கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, நீதி 25:18ஏசா 50:11நீதி 7:23ஆதி 49:23
அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: எபே 5:4நீதி 10:23நீதி 14:9நீதி 15:212 பேது 2:13
நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன்
என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.
விறகில்லாமல் நெருப்பு அணையும்; நீதி 16:28யாக் 3:6நீதி 22:10நீதி 26:22
கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, நீதி 15:18நீதி 29:222 சாமு 20:11 இராஜா 12:2-31 இராஜா 12:20நீதி 10:12நீதி 30:33சங் 120:4
கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; நீதி 18:8நீதி 20:19எசேக் 22:9
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் லூக் 22:47-48லூக் 11:39நீதி 10:18எசேக் 33:31மத் 23:27நீதி 25:42 சாமு 20:9-10
வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.
பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, நீதி 12:20நீதி 10:18சங் 41:6நீதி 12:17நீதி 12:5நீதி 14:8நீதி 11:1
தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான்.
அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; நீதி 6:16-19எரே 12:6சங் 28:3எரே 9:2-8சங் 12:2மத் 24:23மீகா 7:5
அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, சங் 55:21-231 சாமு 18:171 சாமு 18:212 சாமு 13:22-282 சாமு 3:27-30ஆதி 4:8
அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; நீதி 28:10சங் 9:15சங் 7:15-16சங் 10:2பிரச 10:8சங் 57:6எஸ்த 7:10
கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; யோவா 8:44-49லூக் 20:20-21யோவா 10:32-33நீதி 29:5நீதி 6:24நீதி 7:21-23நீதி 7:5யோவா 15:22-24
முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.