தாவீதின் பாடல்.
யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? சங் 24:3-5சங் 84:4சங் 61:4சங் 92:13சங் 23:6வெளி 21:23-24சங் 43:3-4வெளி 21:3-4
யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, நீதி 28:18கொலோ 3:9எபே 4:25நீதி 2:7-8சங் 34:12-131 யோவா 3:7அப் 10:35எபே 2:10
மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், ரோம 13:10சங் 101:5-8மத் 7:12யாக் 4:113 யோவா 1:11லேவி 19:16எரே 9:4-91 பேது 2:1-2
தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,
தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். நியாயாதி 11:35மத் 5:33சங் 101:6சங் 101:41 யோவா 3:14ஏசா 32:5-6சங் 16:3யோபு 32:21-22 தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. உபா 16:19யாத் 22:25எசேக் 22:12உபா 23:19-20எசேக் 18:8மத் 7:21-25யாத் 23:7-8யாக் 1:22-25