தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; சங் 91:4சங் 17:7-8சங் 36:7சங் 63:7சங் 9:10சங் 61:4வெளி 21:4யாக் 5:10-11
உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;
பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். சங் 138:8பிலி 1:6எபி 13:21ஏசா 26:12பிலி 2:12சங் 136:2-3ஏசா 57:15சங் 56:2
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, சங் 40:11சங் 43:3அப் 12:11சங் 144:5-7சங் 56:1-2சங் 61:7மத் 28:2-6யோவா 1:17
அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).
தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; சங் 58:6நீதி 30:14சங் 35:17சங் 55:21நீதி 12:18சங் 64:3தானி 6:22-24யோவா 4:10-11
தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;
அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; ஆப 2:14ஏசா 6:3சங் 72:19எண் 14:21சங் 57:11சங் 108:4-5சங் 113:4-6ஆப 3:3
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; சங் 145:14நீதி 28:10சங் 7:15-16மீகா 7:2சங் 140:5சங் 35:7-8சங் 9:15-16நீதி 29:5
என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, சங் 112:7எபே 5:20சங் 34:4ரோம 5:3ஏசா 24:15சங் 108:1-5
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; சங் 16:9சங் 30:12நியாயாதி 5:12சங் 108:1-3ஏசா 52:1அப் 2:26ஏசா 52:9சங் 150:3
அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; சங் 22:22-23சங் 96:3சங் 18:49ரோம 15:9சங் 138:1சங் 138:4-5சங் 2:1சங் 145:10-12
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
உமது கிருபை வானம்வரையும், சங் 108:4சங் 103:11சங் 36:5ஏசா 54:7-10சங் 71:19எபி 6:17-18சங் 85:10-11சங் 89:1-2
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; சங் 57:5சங் 8:1வெளி 15:3-4சங் 8:9
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.