தாவீதின் பாடல்.
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; சங் 111:11 கொரி 14:15சங் 95:3யோவா 10:34-36சங் 119:46சங் 82:6சங் 86:12-13சங் 96:4
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, மத் 5:18சங் 56:10ஏசா 42:21மத் 24:35சங் 56:41 இராஜா 8:29-30சங் 28:2சங் 5:7
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; 1 பேது 5:10சங் 18:6சங் 34:4-6ஏசா 40:29-31பிலி 4:13சகரி 10:12ஏசா 12:2ஏசா 41:10
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் சங் 102:15சங் 72:11சங் 22:22சங் 22:27ஏசா 49:23ஏசா 60:16ஏசா 60:3-5சங் 102:22
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், சங் 21:5வெளி 4:11வெளி 7:12மல்கி 1:11யாத் 15:11ஏசா 6:1-3வெளி 5:12-14யாத் 33:18-19
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
யெகோவா உயர்ந்தவராக இருந்தும், சங் 113:5-61 சாமு 2:7-8ஏசா 57:15நீதி 3:34யாக் 4:6ஏசா 66:2லூக் 14:11தானி 4:37
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; ஏசா 41:10சங் 23:3-4சங் 71:20-21சங் 85:6அப் 2:33ஏசா 5:25மீகா 7:8-10சங் 144:1-2
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; பிலி 1:6சங் 57:21 தெச 5:24ஏசா 26:12சங் 136:1சங் 103:17எரே 32:39-401 பேது 4:19
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.