சங்கீதங்கள் 72

Psalms 72
சங்கீதம் 72

தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், 2 நாளாக 1:10எரே 23:5-61 நாளாக 22:12-131 நாளாக 29:191 இராஜா 1:39ஏசா 11:2சங் 127:1எபி 1:8-9

ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

அவர் உம்முடைய மக்களை நீதியோடும், ஏசா 32:1ஏசா 32:17சங் 72:12-141 இராஜா 3:5-10ஏசா 11:2-5ஏசா 9:7யோபு 34:19சங் 12:5

உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், ஏசா 52:72 கொரி 5:19-21தானி 9:24எசேக் 34:13-14ஏசா 32:16-17யோவே 3:18சங் 65:12சங் 72:16

மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.

மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏசா 11:4எசேக் 34:15-16சங் 109:31சகரி 9:8-10தானி 2:34-35ஏசா 9:4யோபு 34:24மத் 11:5

ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். சங் 89:36-37தானி 7:14சங் 72:17வெளி 11:151 கொரி 15:24-251 இராஜா 3:281 சாமு 12:18தானி 2:44

புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். ஓசி 6:3உபா 32:22 சாமு 23:4ஓசி 14:5-7ஏசா 14:3-5சங் 65:10எசேக் 34:23-26ஏசா 5:6

அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; ஏசா 2:4மல்கி 4:2சங் 92:12ஏசா 60:22ஏசா 54:11-17லூக் 2:141 நாளாக 22:8-91 இராஜா 4:25

சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், யாத் 23:31சகரி 9:101 இராஜா 4:21-24சங் 2:8சங் 80:11சங் 89:25சங் 22:27-28சங் 89:36

நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.

வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; ஏசா 49:23மீகா 7:17லூக் 19:271 இராஜா 9:181 இராஜா 9:20-21ஏசா 35:1-2சங் 110:1சங் 110:6

அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.

தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஏசா 60:6சங் 68:29ஏசா 49:71 இராஜா 10:1சங் 45:122 நாளாக 9:21ஏசா 60:9ஆதி 10:7

ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சங் 86:9ஏசா 49:22-23வெளி 11:15வெளி 17:14ஏசா 54:5சங் 138:4-5வெளி 20:1-6வெளி 21:24

எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். யோபு 29:12சங் 102:17வெளி 3:17-18பிரச 4:1எபி 7:25சங் 10:17ஏசா 41:17சங் 82:3-4

எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எசேக் 34:16மத் 5:3சங் 109:31யோபு 5:15-16யாக் 2:5-6மத் 18:10

எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.

அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; சங் 116:151 தெச 2:15-16லூக் 1:68-75வெளி 19:22 சாமு 4:9சங் 69:18சங் 130:8வெளி 17:6

அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.

அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; 1 இராஜா 10:14ஏசா 60:6யூதா 1:25பிலி 2:11வெளி 1:18வெளி 5:8-141 கொரி 1:2-31 யோவா 1:2

அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும்,

எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.

பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; 1 இராஜா 4:20வெளி 7:91 கொரி 3:6-9அப் 1:15அப் 2:41அப் 4:4ஓசி 14:5-7ஏசா 2:2-3

அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்;

பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.

அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; ஏசா 7:14மத் 1:23சங் 89:36ஆதி 12:3லூக் 1:48ஆதி 22:18லூக் 1:31-331 பேது 1:3

சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்;

மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்,

எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.

இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; சங் 41:13சங் 106:481 நாளாக 29:10யாத் 15:11சங் 86:10சங் 136:4சங் 77:14யோபு 5:9

அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; எண் 14:21மத் 6:10ஆப 2:14சங் 41:13மத் 6:13வெளி 5:13ஏசா 6:3ஏசா 11:9

பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக.

ஆமென், ஆமென்.

ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. 2 சாமு 23:1எரே 51:64யோபு 31:40லூக் 24:51