இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல்.
பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; நீதி 19:17நீதி 14:212 கொரி 9:8-14அப் 20:35மத் 25:34-39சங் 37:39-40யாக் 2:13எபி 6:10
தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார்.
யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; எரே 45:4-5சங் 27:121 தீமோ 4:8சங் 33:19சங் 37:32-33சங் 128:1-6சங் 140:8-9சங் 37:22
பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்;
அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.
படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; 2இராஜா 20:5-6பிலி 2:26-27சங் 73:262 கொரி 4:16-172இராஜா 1:162இராஜா 1:6
அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.
யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; சங் 103:3யாக் 5:15-16ஓசி 6:12 நாளாக 30:18-20சங் 147:3சங் 32:5சங் 6:2-4சங் 51:1-4
உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்,
என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
அவன் எப்பொழுது சாவான், நீதி 10:7சங் 102:8சங் 38:12யோபு 20:7யோபு 18:17சங் 22:6-8
அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; சங் 12:2லூக் 11:53-54நீதி 26:24-26லூக் 20:20-232 கொரி 11:26தானி 11:27எரே 20:10மீகா 7:5-7
அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு,
தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, நீதி 16:28மத் 22:15மத் 26:3-4சங் 56:5-62 கொரி 12:20நீதி 26:20சங் 31:13ரோம 1:29
எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; லூக் 13:16மத் 27:41-46சங் 71:11யோபு 2:7-8மத் 27:63-64சங் 3:2சங் 38:3-7
படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், யோவா 13:18சங் 55:12-14மத் 26:23யோவா 13:26-27சங் 55:20-22எரே 20:10யோபு 19:192 சாமு 15:12
என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, லூக் 19:27சங் 109:6-21சங் 18:37-42சங் 21:8-10சங் 3:3சங் 57:1சங் 69:22-28
நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், கொலோ 2:15சங் 124:6எரே 20:13சங் 147:11சங் 25:2சங் 31:8சங் 86:17சங் 13:4
நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.
நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, யோபு 36:7சங் 73:23-24யோவா 17:24சங் 34:15சங் 37:17சங் 25:21சங் 63:8சங் 16:11
என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள சங் 72:18-19எபே 1:3வெளி 4:8வெளி 5:9-14சங் 89:52சங் 106:48சங் 150:6வெளி 7:12
எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர்.
ஆமென், ஆமென்.