ஏசாயா 9

Isaiah 9
அத்தியாயம் 9

நமக்காகப் பிறந்த குழந்தை

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாக துன்பப்படுத்தின ஆரம்ப காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் மத்திய தரைக் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள அந்நியமக்களுடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். மத் 4:15-162இராஜா 15:29ஏசா 8:221 நாளாக 5:262 நாளாக 16:42இராஜா 17:5-61 இராஜா 15:19-20லேவி 26:24 இருளில் நடக்கிற மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. மத் 4:16எபே 5:8யோவா 8:12யோவா 12:46லூக் 1:78-791 பேது 2:91 யோவா 1:5-7ஏசா 60:1-3 அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். ஏசா 26:15ஏசா 35:10ஏசா 65:18ஏசா 66:10சங் 119:1621 பேது 1:8ஏசா 61:7எரே 31:12-14 மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். ஏசா 14:25எரே 30:8ஏசா 10:26-27நாகூ 1:13ஏசா 54:14ஏசா 49:26ஏசா 14:3-5ஆதி 27:40 தீவிரமாகப் போர்செய்கிற வீரர்களுடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்டஆடைகள் நெருப்பிற்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். 2 தெச 1:8எசேக் 39:8-10ஏசா 30:33சங் 46:9ஏசா 10:16-17ஏசா 4:4ஏசா 66:15-16யோவே 2:5 நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். லூக் 2:11மத் 28:18எரே 23:5-6ஏசா 7:14மத் 1:231 யோவா 5:20வெளி 19:16யோவா 1:1-2 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும். லூக் 1:32-33தானி 2:44தானி 7:142 சாமு 7:16சங் 45:4-6தானி 7:27தானி 2:351 கொரி 15:24-28

இஸ்ரவேலுக்கு விரோதமான யெகோவாவுடைய கோபம்

ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கியது. ஏசா 7:7-8ஏசா 8:4-8மீகா 1:1-9சகரி 1:6சகரி 5:1-4மத் 24:35 செங்கல்கட்டு இடிந்துபோனது, விழுந்த கற்களாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று, ஏசா 46:121 இராஜா 22:251 பேது 5:5எசேக் 30:19எசேக் 33:33எசேக் 7:27எசேக் 7:9ஏசா 10:9-11 அகந்தையும், மனப்பெருமையுமாகச் சொல்கிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிமக்களுமாகிய எல்லா மக்களிடத்திற்கும் அது தெரியவரும். மல்கி 1:41 இராஜா 10:271 இராஜா 7:9-12 ஆதலால் யெகோவா ரேத்சீனுடைய எதிரிகளை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்ற எதிரிகளை அவர்களுடன் கூட்டிக் கலப்பார். 2இராஜா 15:292இராஜா 16:9ஏசா 10:9-11ஏசா 17:1-5ஏசா 7:8ஏசா 8:4-7 முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் அழிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 2 நாளாக 28:18ஏசா 5:252இராஜா 16:6சங் 79:7ஏசா 10:4ஏசா 9:17ஏசா 9:21எரே 10:25 மக்கள் தங்களை அடிக்கிற தேவனிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் யெகோவாவை தேடாமலும் இருக்கிறார்கள். ஓசி 7:10எரே 5:3ஏசா 31:1ஏசா 1:52 நாளாக 28:22உபா 4:29எசேக் 24:13ஓசி 3:4-5 ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார். ஏசா 19:15வெளி 18:82இராஜா 17:6-20ஆமோ 2:14-16ஆமோ 3:12ஆமோ 5:2-3ஆமோ 6:11ஆமோ 7:17 மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்செய்கிற தீர்க்கதரிசியே வால். ஏசா 29:10மத் 24:241 சாமு 9:62 தீமோ 4:2-3எசேக் 13:19ஏசா 3:2-3எரே 29:21-221 யோவா 4:1 இந்த மக்களை நடத்துகிறவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாக இருக்கிறார்கள். ஏசா 3:12மத் 15:14மத் 23:16-361 இராஜா 8:55-562 நாளாக 30:27எபி 7:7எண் 6:23-26 ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் மோசமானதைப் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. ஏசா 10:6ஏசா 5:25எரே 18:21ஏசா 27:11ஏசா 9:12மத் 12:34ஏசா 10:4ஏசா 9:21 மோசமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும். மல்கி 4:1சங் 83:14ஏசா 34:8-10ஏசா 5:24நாகூ 1:10ஆமோ 7:4உபா 32:22எசேக் 20:47-48 சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, மக்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான். மீகா 7:2மீகா 7:62 பேது 2:4அப் 2:20ஆமோ 5:18எசேக் 9:5ஏசா 1:31ஏசா 13:13 வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் சாப்பிட்டாலும் திருப்தியடையமாட்டார்கள்; அவனவன் தன்தன் பிள்ளைகளின் மாம்சத்தைத் தின்பான். ஏசா 49:26எரே 19:9ஏசா 8:21புலம் 4:10லேவி 26:26-29 மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் அழிப்பார்கள்; இவர்கள் அனைவரும் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. ஏசா 5:252 நாளாக 28:6-8கலா 5:15ஏசா 9:121 சாமு 14:202இராஜா 15:30ஏசா 10:4ஏசா 11:13