முடிவு வருகிறது
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது. ஆமோ 8:21 பேது 4:7ஆமோ 8:10எசேக் 7:3எசேக் 11:13எசேக் 7:5-6புலம் 4:182 நாளாக 34:7 இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன். எசேக் 18:30எசேக் 5:13எசேக் 16:38எசேக் 33:20எசேக் 7:8-9எசேக் 11:10-11எசேக் 34:20-22எசேக் 36:19 என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். எசேக் 6:7எசேக் 11:21எசேக் 5:11எசேக் 16:43எசேக் 6:14எசேக் 7:27எசேக் 9:10ஓசி 12:2 உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது. 2இராஜா 21:12-13எசேக் 5:9நாகூ 1:9ஆமோ 3:2தானி 9:12மத் 24:21 முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாக இருக்கிறது; இதோ, வருகிறது. சகரி 13:72 பேது 2:5எசேக் 21:25எசேக் 39:8எசேக் 7:10எசேக் 7:3எரே 44:27 தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை. எசேக் 12:23-25எசேக் 12:28எசேக் 7:12ஆதி 19:15ஏசா 22:51 பேது 4:17ஆமோ 4:13ஆதி 19:24 இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன். எசேக் 14:19எசேக் 9:8எசேக் 20:21எசேக் 20:8ஏசா 42:25நாகூ 1:6எசேக் 20:332 நாளாக 34:21 என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். வெளி 20:13கலா 6:7ஏசா 9:13மீகா 6:9 இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது, கோல் பூக்கிறது, அகந்தை செழிக்கிறது. ஏசா 10:51 தெச 5:3யாக் 4:6நீதி 16:18எசேக் 19:14எசேக் 7:6ஏசா 28:1எண் 17:8 அக்கிரமமானது கொடுமையின் கோலாக எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கூட்டத்திலும் அவர்களுடைய அழிவிலும் ஒன்றும் மீதியாக இருப்பதில்லை; அவர்களுக்காக புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை. செப்ப 1:18எசேக் 7:23ஏசா 59:6-8எரே 16:5-6ஆமோ 3:10ஆமோ 6:3எசேக் 24:16-24எசேக் 5:11 அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும். ஏசா 5:13-141 கொரி 7:29-31எசேக் 6:11-12எசேக் 7:10எசேக் 7:5-7ஏசா 24:1-2யாக் 5:8-9எரே 32:7-8 அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான். லேவி 25:24-28பிரச 8:8எசேக் 13:22எசேக் 33:26-27யோபு 15:25லேவி 25:31சங் 52:7 அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது. எரே 4:5எசேக் 7:11-12ஏசா 24:1-7எரே 12:12எரே 51:27எரே 6:1எரே 6:11எரே 7:20 வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் வாளால் மரிப்பான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் சாப்பிடும். எசேக் 5:12எரே 14:18புலம் 1:20உபா 32:23-25எரே 15:2-3எசேக் 6:12 அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள். எஸ்றா 9:15ஏசா 38:14ஏசா 59:11ஏசா 37:31சகரி 12:10-14எசேக் 36:31எசேக் 6:8-9ஏசா 1:9 எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும். எசேக் 21:7எபி 12:12எசேக் 22:14ஏசா 13:7-8எரே 6:24 சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும். ஆமோ 8:10ஏசா 15:2-3எசேக் 27:31ஏசா 3:24யோபு 21:6ஆதி 15:12எரே 3:25எரே 48:37 தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது. நீதி 11:4செப்ப 1:18எசேக் 14:7லூக் 12:19-20ஏசா 2:20மத் 16:26பிரச 5:10எசேக் 14:3-4 அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி, எசேக் 24:21எரே 7:30எசேக் 8:15-16எசேக் 8:7-10எசேக் 9:7ஏசா 64:111 நாளாக 29:1-22 நாளாக 2:9 அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். 2இராஜா 24:13சங் 74:2-82 நாளாக 36:18-192இராஜா 25:13-162இராஜா 25:9எரே 52:13-23சங் 79:1 என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். எரே 18:17எசேக் 39:23-24சங் 10:11சங் 35:22சங் 74:10-11சங் 74:18-23 ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது. எசேக் 9:9எரே 27:22இராஜா 21:16எசேக் 11:6ஓசி 4:22இராஜா 24:4எசேக் 19:3-6எசேக் 22:13 ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும். எசேக் 28:7எசேக் 21:31எசேக் 33:28சங் 106:412 நாளாக 7:19-20எசேக் 21:2எசேக் 24:21ஆப 1:6-10 அழிவு வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடைக்காது. ஏசா 57:21ஏசா 59:8-12எரே 8:15-16புலம் 4:17-18எசேக் 13:10எசேக் 13:16மீகா 1:12 அழிவின்மேல் அழிவு வரும்; தீயசெய்தியின்மேல் தீயசெய்தி வரும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்தில் தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இல்லாமல் ஒழிந்துபோகும். எரே 4:20எசேக் 14:1மீகா 3:6சங் 74:9எசேக் 20:1-3எரே 18:18எரே 21:2எரே 37:17 ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார். எசேக் 18:30எசேக் 7:4-81 இராஜா 20:28எசேக் 12:10-22எசேக் 17:15-21எசேக் 21:25எசேக் 26:16ஏசா 3:11