ஏசாயா 59

Isaiah 59
அத்தியாயம் 59

பாவம், பாவஅறிக்கை மற்றும் மீட்பு

இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. எரே 32:17ஏசா 50:2எண் 11:23ஏசா 65:24ஆதி 18:14எபி 7:25ஏசா 58:9மத் 13:15 உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. நீதி 15:29எரே 5:25மீகா 3:4ஏசா 1:15உபா 31:17-18எசேக் 39:23-24உபா 32:19-20ஏசா 57:17 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. ஏசா 1:15எசேக் 13:8எரே 2:34ஏசா 1:21எரே 2:30எசேக் 35:6எசேக் 7:23எசேக் 9:9 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். யோபு 15:35மீகா 7:2-5யாக் 1:15எரே 7:4எரே 7:8ஏசா 30:12ஏசா 59:16மீகா 2:1 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும். மத் 3:7ஏசா 14:29யோபு 8:14மத் 12:34நீதி 23:32 அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. ஏசா 57:12எரே 6:7வெளி 3:17-18ஆமோ 3:10ஆமோ 6:3எசேக் 7:11எசேக் 7:23ஆதி 6:11 அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது. நீதி 6:17ரோம 3:15-17மாற் 7:21-22நீதி 1:16அப் 8:20-22எசேக் 22:6எசேக் 9:9ஏசா 59:3 சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான். ஏசா 57:20-21ரோம 3:17ஏசா 5:7லூக் 1:79சங் 58:1-2ஓசி 4:1-2எரே 5:1மத் 23:23 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம். ஏசா 5:30யோபு 30:261 தெச 5:3ஆமோ 5:18-20ஆப 1:13எரே 14:19எரே 8:15புலம் 5:16-17 நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம். உபா 28:29யோபு 5:14புலம் 3:61 யோவா 2:11ஆமோ 8:9ஏசா 8:15எரே 13:16யோவா 11:9-10 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது. ஏசா 38:14எசேக் 7:16ஓசி 7:14ஏசா 51:20ஏசா 59:9எரே 8:15எரே 9:1யோபு 30:28-29 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். எஸ்றா 9:6ஓசி 5:5எரே 14:7எசேக் 5:6ஓசி 4:2ஏசா 1:41 தெச 2:15-16தானி 9:5-8 யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம். மாற் 7:21-22எபி 3:12யாக் 3:6அப் 5:3-4எசேக் 18:25எசேக் 6:9ஓசி 1:2ஓசி 11:12 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது. பிரச 3:16ஆப 1:4ஆமோ 5:11ஏசா 1:21ஏசா 10:1-2ஏசா 5:23எரே 5:27-28எரே 5:31 சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். மீகா 7:21 யோவா 3:11-12எபி 11:36-38எரே 7:28எரே 5:1-2சங் 12:1-2சங் 5:9ரோம 8:36 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. எசேக் 22:30ஏசா 64:7சங் 106:23சங் 98:1ஏசா 41:28ஏசா 52:10ஏசா 63:3-5மாற் 6:6 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். எபே 6:17எபே 6:141 தெச 5:8ரோம 13:12-14ஏசா 11:5எபி 10:30ஏசா 51:9யோவா 2:17 செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். எரே 17:10ஏசா 63:6மத் 16:27ரோம 2:6நாகூ 1:2ஏசா 1:24ஏசா 49:25-26ஏசா 63:3 அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி 1 வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார். தானி 7:27சங் 113:3வெளி 12:15-17சகரி 4:6சங் 22:27வெளி 17:14-15மல்கி 1:11வெளி 12:10 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார். ரோம 11:26-27தீத் 2:11-14அப் 3:19எசேக் 18:30-31எபி 12:14யோவே 2:32ஒபதி 1:17-21அப் 26:20 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார். எரே 31:31-34எபி 10:16எசேக் 36:25-27எரே 32:38-41எபி 8:6-132 கொரி 3:17-18ஏசா 51:16ஏசா 44:3