நாகூம் 1

Nahum 1
அத்தியாயம் 1

தம்முடைய எதிரிகளின்மேல் தேவனுடைய கோபம்

நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம். செப்ப 2:13யோனா 1:2சகரி 9:1ஆதி 10:11ஏசா 13:1நாகூ 2:8எரே 23:33-37ஏசா 14:28 யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர். யாத் 20:5சகரி 8:2யாத் 34:14சங் 94:1உபா 4:24யோசு 24:19உபா 32:41-43எசேக் 39:25 யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது. யாத் 34:6-7சங் 147:5நெகே 9:17சங் 103:8சங் 104:3சங் 145:8யாக் 1:19சங் 97:2-5 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். ஏசா 33:9சங் 106:9ஏசா 19:5-10ஏசா 44:27ஏசா 50:2-3ஏசா 51:10யோசு 3:13-15சங் 104:7 அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும். மீகா 1:42 சாமு 22:8எரே 4:24ஆப 3:10ஏசா 64:1-2நியாயாதி 5:5சங் 68:8சங் 97:4-5 அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும். எரே 10:10மல்கி 3:2உபா 32:22-23சங் 76:7நாகூ 1:21 இராஜா 19:11எசேக் 30:16ஏசா 10:16 யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். 2 தீமோ 2:19யோவா 10:27புலம் 3:25யோவா 10:14சங் 91:1-2சங் 100:5சங் 27:5நீதி 18:10 ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும். எசேக் 13:13ஏசா 28:17ஏசா 8:22ஆமோ 8:8ஆமோ 9:5-6யோபு 30:15செப்ப 2:132 பேது 3:6-7 நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது. சங் 21:11நீதி 21:30சங் 33:102 கொரி 10:5சங் 2:1-4நாகூ 1:11எசேக் 38:10-11ஏசா 8:9-10 அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள். மீகா 7:4ஏசா 5:24மல்கி 4:1நாகூ 3:112 சாமு 23:6-7ஏசா 9:18எரே 51:571 தெச 5:2-3 யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். நாகூ 1:92 நாளாக 13:71 சாமு 2:122 நாளாக 32:15-192இராஜா 18:13-142இராஜா 18:302இராஜா 19:22-252 சாமு 20:1 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். ஏசா 30:19யோவே 2:19ஏசா 17:14ஏசா 31:8ஏசா 37:36ஏசா 7:20தானி 11:10ஏசா 10:32-34 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன். ஏசா 10:27ஏசா 9:4எரே 2:20ஏசா 14:25சங் 107:14எரே 5:5மீகா 5:5-6 உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். சங் 109:13மீகா 5:13ஏசா 46:1-2நீதி 10:72இராஜா 19:37எசேக் 32:22-23சங் 71:31 சாமு 3:13 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான். ஏசா 52:7ரோம 10:15ஏசா 40:9-10அப் 10:36ஏசா 29:7-8லூக் 2:10லூக் 2:14நாகூ 1:11-12