நாகூம் 3

Nahum 3
அத்தியாயம் 3

நினிவே நகரத்திற்கு ஐயோ

இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது. ஆப 2:12செப்ப 3:1-3எசேக் 22:2-3எசேக் 24:6-9ஓசி 4:2நாகூ 2:12ஏசா 17:14ஏசா 42:24 சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், எரே 47:3நாகூ 2:3-4நியாயாதி 5:22யோபு 39:22-25ஏசா 9:5 வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள். எசேக் 39:4ஆப 3:11ஏசா 34:3ஏசா 37:36ஆதி 3:242இராஜா 19:35எசேக் 31:3-13நாகூ 2:4 தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம், ஏசா 47:9ஏசா 47:12-13எசேக் 16:25-29வெளி 17:1-5வெளி 18:2-3வெளி 18:23வெளி 18:9ஏசா 23:15-17 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி, எரே 13:26எசேக் 23:29எரே 13:22எசேக் 16:37ஏசா 47:2-3நாகூ 2:13ஆப 2:16எசேக் 23:25 உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். மல்கி 2:9எரே 51:37யோபு 9:31சங் 38:5-71 கொரி 4:9எபி 10:33யோபு 30:8நாகூ 1:14 அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான். ஏசா 51:19எரே 15:5வெளி 18:10எரே 51:9புலம் 2:13எண் 16:34நாகூ 1:1நாகூ 2:9-10 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் 1பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. ஆமோ 6:2எசேக் 30:14-16எசேக் 31:2-3ஏசா 19:5-10எரே 46:25-26 எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது. எசேக் 27:10எசேக் 30:52 நாளாக 12:3எசேக் 38:5ஆதி 10:6ஏசா 20:5எரே 46:91 நாளாக 1:8 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். ஏசா 20:4ஓசி 13:16யோவே 3:3ஒபதி 1:11ஏசா 13:16புலம் 2:192இராஜா 8:12ஆமோ 1:13 நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய். ஏசா 2:10ஏசா 49:26லூக் 23:30ஓசி 10:8ஏசா 2:19எரே 4:5நாகூ 1:10சங் 75:8 உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும். வெளி 6:13ஆப 1:10ஏசா 28:4 இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும். எரே 51:30ஏசா 19:16எரே 50:37நாகூ 2:6ஏசா 45:1-2சங் 107:16சங் 147:13 முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து. 2 நாளாக 32:3-4நாகூ 2:1எரே 46:3-42 நாளாக 32:11ஏசா 22:9-11ஏசா 37:25ஏசா 8:9எரே 46:9 அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள். யோவே 1:4நாகூ 2:13நாகூ 3:13யாத் 10:13-15யோவே 2:25செப்ப 2:13 உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். ஆதி 15:5ஆதி 22:17எரே 33:22நெகே 9:23 உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. எரே 51:27வெளி 9:7 அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. 1 இராஜா 22:17சங் 76:5-6ஏசா 13:14எரே 50:18எரே 51:57யாத் 15:16எசேக் 31:3-18எசேக் 32:22-23 உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது? மீகா 1:9புலம் 2:15ஏசா 37:18யோபு 27:23எரே 46:11எசேக் 25:6எசேக் 30:21-22ஏசா 10:6-14