எரேமியா 46

Jeremiah 46
அத்தியாயம் 46

எகிப்தைக்குறித்த செய்தி

அன்னிய மக்களுக்கு விரோதமாக எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: எரே 1:10சகரி 2:8ஆதி 10:5எரே 25:15-38எரே 4:7எண் 23:9ரோம 3:29 எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியருகில் கர்கேமிசில் இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் படையைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்: 2இராஜா 23:29எசேக் 29:1-21ஏசா 10:9எரே 25:1எரே 25:19எரே 36:1எரே 45:1எரே 46:14 கேடகங்களையும் சிறிய கேடகங்களையும் ஆயத்தம்செய்து, போர்செய்வதற்கு வாருங்கள். ஏசா 21:5எரே 51:11-12யோவே 3:9நாகூ 2:1நாகூ 3:14ஏசா 8:9-10 குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைக்கவசத்தை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களை அணிந்துகொள்ளுங்கள். எசேக் 21:9-11எரே 51:31 சாமு 17:381 சாமு 17:52 நாளாக 26:14எசேக் 21:28நெகே 4:16 அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலும் ஏற்பட்ட பயங்கரத்தினால் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் தோல்வியடைந்து, திரும்பிப்பாராமல் ஓட்டமாக ஓடிப்போகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 49:29எரே 6:25எரே 46:212இராஜா 7:6-7எசேக் 32:10ஆதி 19:17ஏசா 19:16எரே 20:10 வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியருகில் அவர்கள் இடறிவிழுவார்கள். தானி 11:19எரே 46:12ஆமோ 9:1-3ஆமோ 2:14-15பிரச 9:11ஏசா 30:16-17ஏசா 8:15நியாயாதி 4:15-21 அலைபோல புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்? எரே 47:2தானி 11:22ஏசா 8:7-8ஆமோ 8:8தானி 9:26ஏசா 63:1வெளி 12:15உன்னத 3:6 எகிப்தியனே அலைபோல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான். யாத் 15:9-10எசேக் 29:3எசேக் 32:2ஏசா 10:13-16ஏசா 37:24-26 குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து அம்பேற்றுகிற லூதீயரும் புறப்படுவார்களாக. எசேக் 27:10ஏசா 66:19நாகூ 3:91 நாளாக 1:111 கொரி 1:8அப் 2:10ஆதி 10:13ஆதி 10:6 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் அழித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியருகில் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவருக்கு ஒரு பலியும் உண்டு. உபா 32:42எரே 46:2யோவே 1:15எரே 46:6செப்ப 1:7-82இராஜா 24:7எசேக் 39:17-21ஏசா 13:6 எகிப்தின் மகளாகிய கன்னிகையே, நீ கீலேயாத்திற்குப்போய், பிசின் தைலம் வாங்கு; திரளான மருந்துகளை நீ சேர்க்கிறது வீண், உனக்கு ஆரோக்கியமுண்டாகாது. எரே 8:22மீகா 1:9ஏசா 47:1எரே 14:17லூக் 8:43-44நாகூ 3:19எசேக் 27:17எசேக் 30:21-25 மக்கள் உன் வெட்கத்தைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாக விழுந்தார்கள் என்றார். நாகூ 3:8-10ஏசா 19:2எரே 14:2எரே 46:61 சாமு 5:12எசேக் 32:9-12ஏசா 10:4ஏசா 15:5-8 எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் யெகோவா சொன்ன வசனம்: எரே 43:10-13எரே 44:30ஏசா 19:1-25ஏசா 29:1-24 ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதை எரித்துப்போடுகிறதென்று சொல்லி, எகிப்தில் அறிவித்து, மிக்தோலில் சொல்லி, நோப்பிலும் தகபானேசிலும் பிரசித்தம்செய்யுங்கள். எரே 44:1எரே 46:10ஏசா 1:20எரே 2:30எரே 43:8-9எரே 46:3-4நாகூ 2:132 சாமு 2:26 உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? யெகோவா அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை. ஏசா 66:15-16சங் 68:2எரே 46:5சங் 18:14சங் 18:39உபா 11:23யாத் 6:1நியாயாதி 5:20-21 அநேகரை இடறச்செய்கிறார்; அவனவன் தன்னருகிலுள்ளவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்பி நமது மகளிடத்திற்கும், நாம் பிறந்த தேசத்திற்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள். லேவி 26:36-37எரே 51:9எரே 46:21எரே 46:6எரே 50:16 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள். ஏசா 19:11-161 இராஜா 20:10யாத் 15:91 இராஜா 20:18எசேக் 29:3எசேக் 31:18ஏசா 31:3ஏசா 37:27-29 மலைகளில் தாபோரும், மத்திய தரைக் கடலின் அருகே கர்மேலும் இருக்கிறதுபோல அவன் கண்டிப்பாக வருவானென்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா தம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறார். எரே 48:15நியாயாதி 4:6யோசு 19:22ஏசா 47:4ஏசா 48:2மல்கி 1:14சங் 89:121 இராஜா 18:42-43 எகிப்து தேசமக்களாகிய மகளே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும். ஏசா 20:4எரே 48:18எசேக் 30:13எரே 44:1எசேக் 12:3-12எரே 26:9எரே 34:22எரே 51:29-30 எகிப்து மகா நேர்த்தியான கிடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான். ஓசி 10:11எரே 47:2எரே 1:14எரே 46:6எரே 25:9எரே 46:10எரே 46:24எரே 50:11 அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாக ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள்மேல் வந்தது. 2இராஜா 7:6எரே 46:5ஒபதி 1:132 சாமு 10:6ஆமோ 6:4ஓசி 9:7ஏசா 34:7எரே 50:27 அவன் பாம்பைப்போல் சீறிவருவான், படைபலத்தோடு நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள். ஏசா 14:8ஏசா 29:4ஏசா 10:15ஏசா 10:33-34ஏசா 37:24எரே 51:20-23மீகா 1:8மீகா 7:16 எண்ணமுடியாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை. நியாயாதி 7:12நியாயாதி 6:5யோவே 2:25எசேக் 20:46ஏசா 10:18வெளி 9:2-10 எகிப்தின் மகள் கலங்குவாள்; வடதிசை மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள். எரே 1:15எசேக் 29:1-21எரே 46:11எரே 46:19-20சங் 137:8 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான மக்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தெய்வங்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து, செப்ப 2:11யாத் 12:12ஏசா 20:5-6எரே 43:12-13எசேக் 30:13-16எசேக் 32:9-12எசேக் 39:6-7ஏசா 19:1 அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 32:11எரே 44:30எசேக் 29:8-14எரே 48:47எரே 49:39 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்துக் காப்பாற்றுவேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியுடனும் பயமில்லாமல் இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்வார் இல்லை. ஏசா 43:5ஏசா 43:1எரே 30:10-11ஏசா 41:13-14எரே 29:14எரே 50:19ஆமோ 9:14ஏசா 44:2 என் ஊழியனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லாத் தேசங்களையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் அழிக்காமல், உன்னைக் குறைவாகத் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னைத் தண்டிக்காமலிருந்தால் நான் குற்றமுள்ளவனாவேன் என்கிறார். வெளி 3:191 கொரி 11:32எரே 10:24ஆமோ 9:8-9எரே 30:11எரே 4:27தானி 2:35ஆப 3:2