ஆதியாகமம் 10

Genesis 10
அத்தியாயம் 10

தேசங்களின் அட்டவணை

1 நாளா 1:5

நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். ஆதி 2:4ஆதி 9:7ஆதி 5:1ஆதி 6:9ஆதி 9:1ஆதி 9:19மத் 1:1

யாப்பேத்தின் வம்சம்

யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். எசேக் 38:2எசேக் 38:61 நாளாக 1:5-7ஏசா 66:19வெளி 20:8எசேக் 39:1எசேக் 27:12-14எசேக் 27:19 கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். எசேக் 27:14எரே 51:27 யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். தானி 11:30ஏசா 23:1ஏசா 23:12எண் 24:24எசேக் 27:12எசேக் 27:25 இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன. செப்ப 2:11ஏசா 42:4எரே 2:10ஆதி 10:20எரே 25:22ஆதி 10:25ஆதி 11:1-9ஏசா 24:15

காமின் வம்சம்

காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். 1 நாளாக 1:8-161 நாளாக 4:40எசேக் 27:10ஆதி 9:22ஏசா 11:11எரே 46:9சங் 105:23சங் 105:27 கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள். எசேக் 27:22எசேக் 27:151 இராஜா 10:1ஆதி 2:11ஏசா 21:13சங் 72:10 கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். மீகா 5:6 இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது. 2 நாளாக 28:22ஆதி 13:13ஆதி 25:27ஆதி 27:30ஆதி 6:11ஆதி 6:4எசேக் 13:18எரே 16:16 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், 1 ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள். ஆதி 11:9ஆதி 11:2ஆதி 14:1மீகா 4:10ஆமோ 6:2ஏசா 10:9ஏசா 11:11ஏசா 39:1 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், மீகா 5:6யோனா 1:2நாகூ 1:1சங் 83:82இராஜா 19:36எசேக் 27:23எசேக் 32:22எஸ்றா 4:2 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், 1 நாளாக 1:11-12எரே 46:9எசேக் 30:5 பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான். எரே 47:41 நாளாக 1:12ஆமோ 9:7உபா 2:23ஏசா 11:11எரே 44:1

கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், யாத் 34:11எண் 34:2-151 நாளாக 1:13ஆதி 15:18-21ஆதி 23:32 சாமு 11:3யாத் 3:8ஆதி 28:3-20 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், 2 சாமு 24:18நியாயாதி 1:21சகரி 9:7 ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும், ஆதி 34:2 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள். 2 நாளாக 13:42இராஜா 17:242இராஜா 17:302 சாமு 8:9எசேக் 27:8எசேக் 47:16-17ஏசா 10:9யோசு 18:22 கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது. ஆதி 14:2ஆதி 19:24-25உபா 32:8ஆதி 13:10-17ஆதி 18:20ஆதி 20:1ஆதி 26:1ஓசி 11:8 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர். ஆதி 10:6ஆதி 11:1-9

சேமின் வம்சம்

சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான். எண் 24:24ஆதி 11:10-26 சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். ஏசா 66:191 நாளாக 1:17-272இராஜா 15:19அப் 2:9ஆதி 14:1-9ஆதி 9:26ஏசா 11:11ஏசா 21:2 ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். யோபு 1:1எரே 25:20 அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான். ஆதி 11:12-15லூக் 3:35 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். 1 நாளாக 1:19ஆதி 10:32உபா 32:8அப் 17:26லூக் 3:35-36ஆதி 11:16-19ஆதி 10:21 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், 1 நாளாக 1:20-28 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 1 நாளாக 1:20-28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 1 நாளாக 1:20-281 இராஜா 10:1ஆதி 25:3 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள். 1 இராஜா 9:281 நாளாக 8:181 நாளாக 9:101 நாளாக 9:131 இராஜா 22:481 சாமு 15:7ஆதி 25:18ஏசா 13:12 இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது. எண் 23:7 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர். ஆதி 10:20ஆதி 10:5அப் 17:26 தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர். ஆதி 9:19அப் 17:26ஆதி 10:1ஆதி 10:20ஆதி 10:25ஆதி 5:29-31ஆதி 9:1ஆதி 9:7