ஆதியாகமம் 2

Genesis 2
அத்தியாயம் 2

ஓய்வுநாள்

இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. யாத் 31:17யாத் 20:11சங் 33:6ஆதி 1:1ஏசா 45:182இராஜா 19:15ஏசா 42:5ஏசா 45:12 தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். எபி 4:4யாத் 31:17உபா 5:14யாத் 20:8-11யாத் 23:12யோவா 5:17ஏசா 58:13ஆதி 1:31 தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். லேவி 23:3எசேக் 20:12மாற் 2:27யாத் 31:13-17லூக் 23:56யாத் 34:21யாத் 35:2-3எரே 17:21-27

ஆதாமும் ஏவாளும்

தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. ஆதி 5:1வெளி 1:8யாத் 15:3ஆதி 1:1ஆதி 1:31ஆதி 1:4ஆதி 36:11 இராஜா 18:39 நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை. ஆதி 3:23எபி 6:7யோபு 5:10ஆதி 1:11-12ஆதி 4:12ஆதி 4:2யோபு 38:26-28எரே 14:22 அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று 1எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான். பிரச 12:7யோபு 33:41 கொரி 15:45ஏசா 64:8அப் 17:251 கொரி 15:47யோபு 27:3ஆதி 3:19 தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். எசேக் 28:13ஆதி 3:24ஆதி 13:102இராஜா 19:12எசேக் 31:8-9ஆதி 4:16யோவே 2:3ஏசா 51:3 தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார். ஆதி 3:22வெளி 2:7வெளி 22:14வெளி 22:2எசேக் 47:12நீதி 11:30நீதி 3:18ஆதி 2:17 தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. வெளி 22:1சங் 46:4 முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு. ஆதி 25:181 சாமு 15:7ஆதி 10:29ஆதி 10:7 அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் 2 உண்டு. எசேக் 28:13யாத் 28:20யோபு 28:16யாத் 39:13எண் 11:7 ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். ஆதி 10:6ஏசா 11:11

தேவன் கொடுத்த தண்டனை

மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர். தானி 10:4ஆதி 15:18உபா 1:7உபா 11:24ஆதி 10:11ஆதி 10:22ஆதி 25:18வெளி 9:14 தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். சங் 128:2ஆதி 2:8எபே 4:28ஆதி 2:2யோபு 31:33 தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம். 1 சாமு 15:221 தீமோ 4:41 தீமோ 6:17ஆதி 2:9ஆதி 3:1-2 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார். ரோம 6:23யாக் 1:15ஆதி 3:191 கொரி 15:561 கொரி 15:22கலா 3:10வெளி 21:81 யோவா 5:16 பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார். பிரச 4:9-12நீதி 18:221 கொரி 11:7-121 பேது 3:71 தீமோ 2:11-13ரூத் 3:1ஆதி 1:31ஆதி 3:12 தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது. சங் 8:4-8ஆதி 1:28ஆதி 1:20-26ஆதி 9:2ஆதி 2:22-23ஆதி 6:20 அப்படியே ஆதாம் 3 அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆதி 2:18 அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். ஆதி 15:12யோபு 4:131 சாமு 26:12தானி 8:18யோபு 33:15நீதி 19:15

தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். 1 கொரி 11:8-91 தீமோ 2:13எபி 13:4நீதி 18:22நீதி 19:14ஆதி 2:19சங் 127:1 அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான். எபே 5:28-301 கொரி 11:8-92 சாமு 5:1ஆதி 29:14நியாயாதி 9:22 சாமு 19:13 இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். மத் 19:3-9எபே 5:28-31மாற் 10:6-12ரோம 7:21 பேது 3:1-71 கொரி 7:2-41 கொரி 6:16-17நீதி 31:10 ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். ஆதி 3:7ஆதி 3:10-11ரோம 10:11எரே 17:13யோவே 2:26ஏசா 47:3ஏசா 54:4யாத் 32:25