சவுலை ராஜாவாக இராதபடி யெகோவா புறக்கணித்தல்
பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: 1 சாமு 9:161 சாமு 12:141 நாளாக 22:12-131 சாமு 13:13சங் 2:10-111 சாமு 10:11 சாமு 15:16-182 சாமு 23:2-3 சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். உபா 25:17-19எண் 24:20யாத் 17:8-16ஓசி 7:2ஆமோ 8:7எரே 31:34 இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான். உபா 20:16-18எண் 24:201 சாமு 22:19ஏசா 14:21-22எண் 31:17யோசு 6:17-21லேவி 27:28-29உபா 13:15-16 அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள். யோசு 15:241 சாமு 11:81 சாமு 13:15 சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான். சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். நியாயாதி 1:16எண் 10:29-32யாத் 18:19நியாயாதி 4:11எண் 24:21-221 சாமு 27:10யாத் 18:9-10நியாயாதி 5:24 அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து, 1 சாமு 14:48ஆதி 16:7ஆதி 25:181 சாமு 27:8யாத் 15:22ஆதி 2:11பிரச 8:13யோபு 21:30 அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான். 1 சாமு 30:1எஸ்த 3:1எண் 24:71 இராஜா 20:301 இராஜா 20:34-421 சாமு 15:3யோசு 10:39யோசு 11:12
சவுலின் பாவத்தை சாமுவேல் உணர்த்துதல்
சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். 1 சாமு 15:151 சாமு 15:191 சாமு 15:3யோசு 7:212 சாமு 6:13 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான். 1 சாமு 13:13ஆதி 6:62 சாமு 24:16சங் 119:1361 சாமு 15:31 சாமு 15:351 சாமு 15:9எரே 9:18 மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. யோசு 15:551 சாமு 25:22 சாமு 18:181 இராஜா 18:421 சாமு 7:12யோசு 4:8-9 சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். நியாயாதி 17:2ரூத் 3:101 சாமு 15:111 சாமு 15:9ஆதி 14:19ஆதி 3:12லூக் 17:10லூக் 18:11 அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். 1 கொரி 4:5எரே 2:18-19எரே 2:22-23எரே 2:34-37லூக் 19:22மல்கி 3:13-15சங் 36:2சங் 50:16-21 அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். 1 சாமு 15:211 சாமு 15:9யாத் 32:22-23ஆதி 3:12-13யோபு 31:33லூக் 10:29மத் 2:8நீதி 28:13 அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். 1 இராஜா 22:161 சாமு 12:71 சாமு 9:27 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே. 1 சாமு 10:221 சாமு 15:1-31 சாமு 9:211 சாமு 10:1நியாயாதி 6:15மத் 18:4ஓசி 13:1 இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார். ஆதி 13:13ஆதி 15:16யோபு 31:3எண் 16:38நீதி 10:29நீதி 13:21 இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான். 1 சாமு 14:322 நாளாக 33:22 நாளாக 33:62 நாளாக 36:12ஆப 2:9-12எரே 7:11நீதி 15:272 தீமோ 4:10 சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன். 1 சாமு 15:13மத் 19:20ரோம 10:31 சாமு 15:31 சாமு 15:8யோபு 33:9யோபு 34:5யோபு 35:2 மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். 1 சாமு 15:15யாத் 32:22-23ஆதி 3:13 அதற்குச் சாமுவேல்: ஓசி 6:6சங் 51:16-17நீதி 21:3ஆமோ 5:21-24மாற் 12:33மத் 9:13மீகா 6:6-8எரே 7:22-23
“யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட,
சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ?
பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம்.
கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், எரே 28:161 சாமு 13:14லேவி 20:6கலா 5:202 கொரி 6:16உபா 18:10-11எரே 29:32யாத் 22:18
பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது;
நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே,
அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்”
என்றான். அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். 2 சாமு 12:13ஏசா 51:12-13கலா 1:10எண் 22:34நீதி 29:251 சாமு 15:30யாத் 23:2யாத் 9:27 இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். யாத் 10:17 சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். ஓசி 4:61 சாமு 13:141 சாமு 16:11 சாமு 15:232 யோவா 1:11எரே 6:191 சாமு 15:311 சாமு 2:30 போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று. 1 இராஜா 11:30-31 அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். 1 சாமு 28:17-18அப் 13:221 இராஜா 11:30-311 சாமு 13:141 சாமு 16:121 சாமு 2:7-8தானி 4:17தானி 4:32 இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான். எண் 23:19எசேக் 24:14தீத் 1:22 தீமோ 2:13எபி 6:18சங் 95:11யோவே 3:162 கொரி 12:9 அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். யோவா 12:43யோவா 5:44ஏசா 29:132 தீமோ 3:5ஆப 2:4லூக் 18:9-14 அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான். பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான். 1 தெச 5:3எரே 48:44வெளி 18:7 சாமுவேல்: உன் பட்டயம் பெண்களைப் பிள்ளை இல்லாதவர்களாக ஆக்கினதுபோல, பெண்களுக்குள்ளே உன் தாயும் பிள்ளை இல்லாதவள் ஆவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே யெகோவாவுக்கு முன்பாக ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டான். நியாயாதி 1:7ஆதி 9:6மத் 7:2யாக் 2:13வெளி 16:6வெளி 18:61 இராஜா 18:40யாத் 17:11 பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். 1 சாமு 11:41 சாமு 7:17 சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான். 1 சாமு 15:111 சாமு 19:241 சாமு 16:1எரே 9:1-2ஆதி 6:6பிலி 3:18சங் 119:136சங் 119:158