ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன். எரே 13:17ஏசா 22:4எரே 8:21-22புலம் 2:11எரே 6:26எசேக் 21:6-7ஏசா 16:9எரே 14:17 ஆ, வனாந்திரத்தில் வழிப்போக்கரின் தங்குமிடம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் மக்களைவிட்டு, அவர்களிடத்தில் இருக்காமல் போய்விடுவேன்; அவர்களெல்லோரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள். எரே 23:10எரே 5:7-8ஓசி 4:2ஓசி 7:4எரே 12:1எரே 12:6எசேக் 22:10-11ஓசி 5:7 அவர்கள் பொய்யைப் பயன்படுத்தத்தக்க தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்தில் பலப்படுவது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 4:22எரே 9:8ஏசா 59:13-15நியாயாதி 2:101 சாமு 2:12ரோம 3:132 கொரி 4:4-62 தீமோ 3:13 நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு 1எச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். மீகா 7:5-6நீதி 26:24-25சங் 12:2-3எரே 6:28லேவி 19:16நீதி 10:18நீதி 25:18மத் 10:21 அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள். ஆப 2:13ஏசா 57:10ஏசா 59:13-15யோபு 15:5மீகா 6:121 தீமோ 4:2எபே 4:25எசேக் 24:12 வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 4:6எரே 13:10எரே 11:19எரே 20:10எரே 5:27எரே 8:5யோவா 3:19-20யோபு 21:14-15 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்? ஏசா 1:25ஏசா 48:10எரே 6:27மல்கி 3:3சகரி 13:91 பேது 1:71 பேது 4:12ஓசி 11:8-9 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான். சங் 28:3நீதி 26:24-26சங் 120:32 சாமு 20:9-102 சாமு 3:27எரே 9:3சங் 12:2சங் 55:21 இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார். எரே 5:29எரே 5:9ஏசா 1:24 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது. எரே 12:4ஓசி 4:3எசேக் 14:15எசேக் 29:11எசேக் 33:28எரே 12:10எரே 7:29ஏசா 49:19 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன். ஏசா 25:2ஏசா 13:22ஏசா 34:13எரே 10:22எரே 51:37எரே 25:11எரே 26:18எரே 34:22 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று யெகோவாவுடைய வாய் தன்னுடன் சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? ஓசி 14:9சங் 107:43உபா 32:29சங் 107:341 இராஜா 9:8-9உபா 29:22-28எசேக் 14:23எசேக் 22:25-31 நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், 2 நாளாக 7:19எரே 22:9எஸ்றா 9:10உபா 31:16-17நீதி 28:4சங் 119:53சங் 89:30-32செப்ப 3:1-6 தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார். எரே 3:17எரே 7:241 பேது 1:18எபே 2:3கலா 1:14ரோம 1:21-24எபே 4:17-19ஆதி 6:5 ஆதலால், இதோ, நான் இந்த மக்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுத்து, எரே 8:14புலம் 3:15சங் 80:5எரே 23:15உபா 29:18ஏசா 2:17ஏசா 2:22எரே 25:15 அவர்களும், அவர்கள் முற்பிதாக்களும் அறியாத மக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை அழிக்கும்வரை அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். உபா 28:64எசேக் 5:12எசேக் 5:2லேவி 26:33எரே 44:27எரே 13:24உபா 28:25உபா 28:36 நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆமோ 5:16-17பிரச 12:52 நாளாக 35:25யோபு 3:8மத் 9:23மாற் 5:38 அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக. எரே 9:1ஏசா 22:4எரே 14:17எரே 9:20எரே 13:17எரே 6:26எரே 9:10புலம் 1:2 எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். எரே 4:13உபா 28:29எசேக் 7:16-18எரே 2:14எரே 4:20எரே 4:30-31புலம் 4:15புலம் 5:2 ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். லூக் 23:27-30ஏசா 32:9-13யோபு 22:22ஏசா 3:16எரே 9:17-18ஏசா 3:4 வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது. எரே 6:112 நாளாக 36:17எசேக் 9:5-6எரே 15:7ஆமோ 6:10-11எசேக் 21:14-15 மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல். எரே 8:2எரே 25:33ஏசா 5:25எரே 16:4சங் 83:10செப்ப 1:172இராஜா 9:37எரே 7:33 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; 1 கொரி 1:27-29ஏசா 5:21பிரச 9:11ரோம 1:221 கொரி 3:18-20சங் 49:6-13எசேக் 7:191 கொரி 1:19-21 மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். 2 கொரி 10:17கலா 6:141 கொரி 1:31மீகா 6:8மீகா 7:18சங் 44:81 யோவா 5:20சங் 146:7-9 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களுடன் விருத்தசேதனமுள்ள அனைவரையும், கலா 5:2-6ரோம 2:25-26ரோம 2:8-9ஆமோ 3:2எசேக் 28:10எசேக் 32:19-32 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் மக்களையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்திரக்குடிகளான அனைவரையும் தண்டிப்பேன்; அந்நியமக்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்தில் மாற்றமி ல்லாதவர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 4:4லேவி 26:41எசேக் 44:7ஏசா 19:24-25ரோம 2:28-29அப் 7:51உபா 30:6எசேக் 24:1-27
எரேமியா 9
Jeremiah 9அத்தியாயம் 9