கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.
தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் சங் 78:3-6யாத் 13:14-15உபா 6:20நியாயாதி 6:13யோவே 1:3சங் 42:1சங் 77:5ஏசா 38:19
நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்;
அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.
தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; யாத் 15:17சங் 78:552 சாமு 7:10யோசு 11:23யோசு 21:43யாத் 34:11சங் 135:10-12சங் 80:8-11
மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; உபா 7:7-8உபா 8:17-18யோசு 24:12சகரி 4:62 கொரி 4:7உபா 4:37-38யாத் 15:16சங் 20:6
அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை;
நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால்,
உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும்,
உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
தேவனே, நீர் என்னுடைய ராஜா; சங் 42:8சங் 74:12மாற் 9:25சங் 149:2சங் 89:18ஏசா 33:22மாற் 1:25-26மாற் 1:31
யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக 1.
உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, சங் 108:13சங் 60:12சங் 118:10-13பிலி 4:13உபா 33:17தானி 8:4சகரி 10:5ஏசா 41:14-16
எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், 1 சாமு 17:47ஓசி 1:7சங் 20:7சங் 33:16-17
என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை.
நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, சங் 136:24சங் 140:7யோசு 1:5யோசு 23:9-10சங் 132:18யோசு 10:42சங் 144:10சங் 40:14
எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; சங் 34:2எரே 9:241 கொரி 1:29-31ரோம 2:17ஏசா 45:25சங் 30:12சங் 115:1-18
உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, சங் 60:10சங் 74:1சங் 108:11சங் 60:1சங் 43:2எரே 33:24-26புலம் 3:31-32சங் 89:38-45
வெட்கமடையச்செய்கிறீர்;
எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; யோசு 7:8லேவி 26:17யோசு 7:12சங் 89:41உபா 28:25ஏசா 10:61 சாமு 31:1-71 சாமு 4:17
எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, உபா 4:27உபா 28:64எசேக் 34:12ரோம 8:36ஏசா 11:11-12எரே 32:372இராஜா 17:6எரே 12:3
தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; எரே 15:13உபா 32:30ஏசா 52:3-4ஏசா 50:1நியாயாதி 2:14நியாயாதி 3:8நெகே 5:8-12வெளி 18:13
அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், சங் 79:4சங் 80:6எரே 24:9உபா 28:37எசேக் 36:19-23எரே 48:27சங் 123:3-4சங் 89:41
எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும்,
பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், எரே 24:92இராஜா 19:21உபா 28:37யோபு 16:4யோபு 17:6புலம் 2:15-171 இராஜா 9:72 நாளாக 7:20
மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.
நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், சங் 69:72 நாளாக 32:21எரே 51:51யோசு 7:7-9சங் 71:13எஸ்றா 9:6எரே 3:25சங் 89:45
பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; சங் 8:2சங் 74:10சங் 74:18சங் 74:22-23ஏசா 37:17ஏசா 37:23-24ஏசா 37:3-4சங் 79:12
என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், தானி 9:13உபா 6:12உபா 8:14எசேக் 16:59எசேக் 20:37ஏசா 17:10எரே 2:32எரே 31:32
உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை,
உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.
நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, சங் 119:51சங் 119:157யோபு 23:11-12சங் 78:57செப்ப 1:61 கொரி 15:581 இராஜா 15:5எரே 11:10
மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை. சங் 23:4யோபு 3:5ஏசா 34:13-14எரே 14:17யோபு 30:29சங் 51:8எசேக் 29:3ஏசா 27:1
நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, சங் 81:9யோபு 11:13உபா 6:14யோபு 31:5-40சங் 68:31சங் 7:3-51 இராஜா 8:22யாத் 9:29
அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? எரே 17:10எரே 23:24பிரச 12:14யோபு 34:21-22எபி 4:12-13யோபு 31:41 கொரி 4:5சங் 139:1-24
இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; ரோம 8:36ஏசா 53:7சங் 44:111 கொரி 4:9யோவா 15:21யோவா 16:2-31 கொரி 15:30-31மத் 5:10-12
அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? சங் 7:6சங் 78:65சங் 35:23சங் 74:1சங் 77:7சங் 88:14ஏசா 51:9மாற் 4:38
எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, யோபு 13:24உபா 32:20சங் 42:9யாத் 2:23-24சங் 10:1சங் 10:11சங் 13:1சங் 43:1-4
எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; சங் 119:25ஏசா 51:23புலம் 4:5சங் 66:11-12
எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; சங் 130:7-8சங் 25:22சங் 26:11சங் 35:2
உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.