இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; சங் 18:48சங் 140:4சங் 71:4ஆப 1:2-3சங் 140:11சங் 17:13சங் 43:1சங் 59:1-3
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, சங் 36:4சங் 56:6சங் 64:5-6ஓசி 7:6மீகா 2:1-3நாகூ 1:11நீதி 12:20சங் 120:7
யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; சங் 58:42 கொரி 11:3ரோம 3:13-14நீதி 23:32ஏசா 59:3-5யாக் 3:6-8எரே 9:3எரே 9:5
அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி சங் 36:11சங் 17:5சங் 71:4சங் 17:8-9சங் 37:32-40சங் 55:1-3நீதி 18:5
கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்;
அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் சங் 142:3சங் 35:7எரே 18:22எரே 18:20லூக் 20:20-23சங் 119:85சங் 123:3-4சங் 57:6
கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்;
வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; சங் 16:2சங் 31:14சங் 119:57சங் 142:5சகரி 13:9புலம் 3:24சங் 116:1சங் 130:2
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, சங் 62:7சங் 18:1-2சங் 89:26உபா 33:27-29சங் 62:2சங் 144:10சங் 27:1சங் 28:7-8
யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; சங் 10:2-32 சாமு 15:31உபா 32:27யோபு 5:12-13சங் 27:12சங் 94:20-21
அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. சங் 7:16நீதி 18:7நீதி 12:13சங் 94:23எஸ்த 7:10நீதி 10:11நீதி 10:6சங் 64:8 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; சங் 11:6சங் 21:9வெளி 20:15வெளி 21:8யாத் 9:23-24ஆதி 19:24மத் 13:42மத் 13:50
நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; சங் 34:21நீதி 18:21ஏசா 3:11நீதி 13:21நீதி 17:20நீதி 12:13நீதி 6:17சங் 12:3-4
கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
சிறுமையானவனின் வழக்கையும், சங் 9:41 இராஜா 8:491 இராஜா 8:45நீதி 23:10-11எரே 22:16மத் 11:5சங் 102:17சங் 35:10
எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; சங் 11:7சங் 16:111 தெச 4:17ஏசா 3:10யோவா 17:24யோவா 14:3வெளி 7:14-17சங் 23:6
செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.