தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். ஏசா 26:3-4சங் 17:8சங் 31:23சங் 56:12 தீமோ 1:12சங் 116:6சங் 7:1எரே 17:7-8
என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: சங் 73:25சங் 31:14யோபு 22:2-3சங் 89:26சங் 91:2யோவா 20:28சங் 27:8சங் 8:1
தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர்,
என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நீதி 13:20எபி 6:10நீதி 12:262 நாளாக 6:41அப் 9:13மல்கி 3:171 யோவா 3:14-17எபே 5:25-27
நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும்,
அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; யாத் 23:13யோசு 23:7சங் 32:10சங் 97:7யோனா 2:8ஏசா 57:6சங் 106:37-38ஆதி 35:14
அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன்,
அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; சங் 73:26சங் 142:5புலம் 3:24சங் 119:57சங் 23:5உபா 32:9சங் 89:20-37சங் 89:4
என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; எரே 3:19எபே 1:18எபி 12:2சங் 21:1-3சங் 78:551 கொரி 3:21-23ரோம 8:17பிலி 2:9-11
ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; ஏசா 50:4சங் 17:3சங் 63:6சங் 73:24சங் 77:6சங் 42:8ஏசா 26:9எரே 17:10
இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; சங் 62:6அப் 2:25-28சங் 73:23சங் 121:5சங் 73:26சங் 110:5சங் 109:31எபி 11:27
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; அப் 2:26சங் 30:12சங் 57:8சங் 4:7-8சங் 108:11 தெச 4:13-14யோபு 14:14-15யோபு 19:26-27
என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; அப் 2:27-31அப் 13:35-38சங் 49:15வெளி 1:18ஏசா 14:9வெளி 20:13உபா 32:22லூக் 1:35
உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.
வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; அப் 2:28யூதா 1:24சங் 36:7-8வெளி 7:15-17எபே 3:19சங் 21:4-6நீதி 4:18சங் 17:15
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,
உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.