உபாகமம் 18

Deuteronomy 18
அத்தியாயம் 18

காணிக்கைகள்

“லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம். உபா 10:9எண் 18:8-91 கொரி 9:13-14உபா 12:19யோசு 13:14யோசு 13:33எண் 18:20எண் 26:62 அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து. 1 பேது 2:51 பேது 2:9ஆதி 15:1ஏசா 61:6புலம் 3:24சங் 119:57சங் 16:5சங் 73:24-26 மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். லேவி 7:30-34உபா 12:27 உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 2 நாளாக 31:4-10யாத் 22:29யாத் 23:19லேவி 23:10லேவி 23:17நெகே 12:44-47எண் 18:12-24உபா 26:9-10 அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். உபா 10:8எண் 3:10உபா 17:12யாத் 28:1-14எண் 16:5எண் 16:9-10எண் 17:5-9எண் 25:13 “இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக வந்தால், எண் 35:2-3உபா 12:51 பேது 5:21 தீமோ 3:1உபா 16:2சங் 26:8சங் 27:4சங் 63:1-2 அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான். 2 நாளாக 31:2-4 அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். நெகே 12:44நெகே 12:472 நாளாக 31:4லூக் 10:71 கொரி 9:7-141 தீமோ 5:17-18லேவி 7:14லேவி 7:8-9

அருவருப்பான செயல்பாடுகள்

“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். உபா 12:29-31லேவி 18:26-27லேவி 18:30 தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், லேவி 19:31யாத் 22:18லேவி 19:262 நாளாக 33:6அப் 19:19உபா 12:311 நாளாக 10:131 சாமு 28:9 மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 1 சாமு 28:11-14லேவி 19:31 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். லேவி 18:24உபா 9:4லேவி 18:27 உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக. ஆதி 17:1மத் 5:48ஆதி 6:9யோபு 1:1யோபு 1:8பிலி 3:12சங் 37:37பிலி 3:15

தீர்க்கதரிசி

“நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார். அப் 14:16உபா 18:10ஆதி 20:6சங் 147:19-20 உன் தேவனாகிய யெகோவா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக. அப் 3:22-23அப் 7:37யோவா 1:45உபா 18:18-19எபி 1:1-2லூக் 9:35மத் 17:5யோவா 6:29 ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய யெகோவாவை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார். யாத் 20:19உபா 9:10உபா 5:23-28எபி 12:19 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. உபா 5:28 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். யோவா 12:49-50யோவா 8:28உபா 18:15யோவா 4:25யோவா 17:8லூக் 24:19ஏசா 51:16யோவா 1:45 என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். அப் 3:22-23எபி 2:3எபி 12:25-26எபி 10:26எபி 3:7மாற் 16:16 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். உபா 13:1-5எரே 27:15எசேக் 13:6எரே 23:13-15எரே 23:31எரே 28:15-17மத் 7:15சகரி 13:3 யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 1 யோவா 4:1-31 தெச 5:24வெளி 2:2 ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபா 18:202இராஜா 20:1எரே 28:1-17உபா 13:1-2யோனா 4:2சகரி 1:5-6ஏசா 41:22நீதி 26:2