உபாகமம் 26

Deuteronomy 26
அத்தியாயம் 26

முதற்பலன்களும் தசமபாகங்களும்

“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது, உபா 17:14உபா 13:1உபா 13:9உபா 18:9உபா 5:31உபா 6:1-10உபா 7:1எண் 15:18 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய், யாத் 23:19யாத் 23:161 கொரி 15:20உபா 16:10யாத் 34:26எசேக் 44:301 கொரி 16:2உபா 12:5-6 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: யெகோவா எங்களுக்குக் கொடுக்க நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 1 பேது 2:5உபா 19:17ஆதி 17:8ஆதி 26:3எபி 10:21எபி 13:15எபி 6:16-18எபி 7:26 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன். எபி 13:10-12மத் 23:19மத் 5:23-24 அப்பொழுது நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நின்று அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்; அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப் போய், அவ்விடத்தில் அந்நியனாகக் குடியிருந்து, அங்கே பெரிய பலத்த எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான். உபா 10:22ஆதி 46:27ஆதி 31:20ஆதி 43:1-2ஆதி 31:24ஆதி 43:12ஆதி 45:11ஆதி 45:7 எகிப்தியர்கள் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, யாத் 1:11யாத் 1:14உபா 4:20யாத் 1:16யாத் 1:22யாத் 5:23யாத் 5:9யாத் 5:19 எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டோம்; யெகோவா எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்களுடைய சிறுமையையும், வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து, யாத் 2:23எபே 3:20-21யாத் 3:91 சாமு 9:16யாத் 4:31யாத் 6:5எரே 33:2சங் 103:1-2 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உபா 4:34உபா 5:15யாத் 12:37யாத் 12:41யாத் 12:51யாத் 13:3யாத் 14:16-31சங் 105:27-38 எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். யாத் 3:81 சாமு 7:12அப் 26:22எசேக் 20:15எசேக் 20:6யோசு 23:14சங் 105:44சங் 107:7-8 இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து, 1 நாளாக 29:141 கொரி 10:311 பேது 4:10-11உபா 18:4உபா 26:17உபா 26:2உபா 26:4உபா 6:10-13 நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக. உபா 16:11உபா 12:7பிலி 4:4உபா 28:47ஏசா 65:14சங் 100:1-2உபா 12:12சங் 63:3-5 “தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு, லேவி 27:30எண் 18:24பிலி 4:18-19உபா 14:22-29எபி 7:5நீதி 14:21உபா 12:17-19உபா 16:14 நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை. சங் 119:141சங் 119:153சங் 119:1761 யோவா 3:17-222 கொரி 1:122 கொரி 11:31அப் 24:16உபா 14:29 நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். லேவி 7:20ஓசி 9:4லேவி 21:1லேவி 21:11சங் 106:28உபா 16:11எசேக் 24:17மல்கி 2:13 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து பார்த்து, உமது மக்களாகிய இஸ்ரவேலர்களையும், நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, எங்களுக்குக் கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. ஏசா 63:15சகரி 2:131 இராஜா 8:271 இராஜா 8:43அப் 7:49ஏசா 66:1-2எரே 31:23உபா 26:7

யெகோவாவுடைய கட்டளைகள்

“இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய். யோவா 14:15உபா 12:11 யோவா 5:2-3உபா 11:1உபா 11:8உபா 12:32உபா 13:3-4உபா 4:1-6 யெகோவா எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். யாத் 24:7ஏசா 12:21 கொரி 6:19-20யாத் 20:192 கொரி 8:5உபா 13:18உபா 15:5உபா 30:16 யெகோவாவும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும், உபா 14:2உபா 28:9உபா 7:6யாத் 6:7தீத் 2:14யாத் 19:5-6எசேக் 36:25-27ரோம 16:26 நான் உண்டாக்கிய எல்லா மக்களையும்விட, புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கச் செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய யெகோவாவான எனக்குப் பரிசுத்த மக்களாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்” என்றான். 1 பேது 2:9உபா 28:1உபா 7:6உபா 4:7-8யாத் 19:6ஏசா 62:121 பேது 2:5வெளி 1:5-6