இரத்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுதல்
பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள். எண் 11:16யாத் 6:23லேவி 10:1-2யாத் 19:24யாத் 28:11 நாளாக 6:3யாத் 1:5யாத் 19:20 மோசே மட்டும் யெகோவாவுக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனுடன் ஏறிவரவேண்டாம்” என்றார். யாத் 24:13யாத் 24:15யாத் 24:18எபி 10:21-22எபி 9:24எரே 30:21எரே 49:19எண் 16:5 மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள். யாத் 19:8யாத் 24:7யோசு 24:22உபா 5:1உபா 6:1உபா 4:1உபா 4:45உபா 4:5 மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். உபா 31:9ஆதி 28:18கலா 2:9யோசு 4:8-9லூக் 22:30வெளி 21:141 இராஜா 11:30யாத் 20:24-26 இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். யாத் 18:12யாத் 19:22லேவி 1:1-17லேவி 3:1-17லேவி 7:11-21 அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, கிண்ணங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, 1 பேது 1:19யாத் 24:8எபி 9:18லேவி 4:61 பேது 1:2கொலோ 1:20யாத் 12:22யாத் 12:7 உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்றார்கள். உபா 31:11-13யாத் 24:3-4எபி 9:18-231 தெச 5:27அப் 13:15கொலோ 4:16எரே 7:23-24 அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான். எபி 10:4-5யாத் 24:6எசேக் 36:25மத் 26:281 கொரி 11:25எபி 13:201 பேது 1:2எபி 9:18-21
பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய், யாத் 24:1 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது. யோவா 1:18எசேக் 10:1யாத் 33:20யாத் 33:23எசேக் 1:26-28ஆதி 32:301 தீமோ 6:16ஏசா 6:1-5 அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள். யாத் 18:12லூக் 15:23-24ஆதி 31:541 கொரி 10:16-18உபா 12:7பிரச 9:7யாத் 19:21ஆதி 16:13
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார். உபா 5:22யாத் 31:18யாத் 32:15-16எபி 9:42 கொரி 3:3எரே 31:332 கொரி 3:7உபா 4:14 அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது, யாத் 33:11எண் 11:28யாத் 17:9-14யாத் 3:1யாத் 32:17 அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான். யாத் 17:12யாத் 17:10ஆதி 22:51 சாமு 10:81 சாமு 13:8-13யாத் 18:25-26யாத் 32:1 மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது. யாத் 19:9மத் 17:5யாத் 19:162 நாளாக 6:1 யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். யாத் 16:10எண் 16:42எசேக் 1:28லேவி 9:232 கொரி 4:6யாத் 19:11யாத் 20:10யாத் 24:17 மலையின் உச்சியிலே யெகோவாவுடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. எபி 12:29உபா 4:24உபா 4:36யாத் 3:2எபி 12:18யாத் 19:18ஆப 3:4-5எசேக் 1:27 மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான். உபா 9:9உபா 10:10யாத் 34:28உபா 9:18உபா 9:251 இராஜா 19:8யாத் 19:20யாத் 24:17