2 கொரிந்தியர் 11

2 Corinthians 11
அத்தியாயம் 11

பவுலும் கள்ள அப்போஸ்தலர்களும்

என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 1 கொரி 1:212 கொரி 11:42 கொரி 11:192 கொரி 11:212 கொரி 5:132 கொரி 11:16-171 கொரி 3:181 கொரி 4:10 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஓசி 2:19-20எபே 5:26-27ஏசா 54:5கொலோ 1:28யோவா 3:29லேவி 21:13-15ஏசா 62:4-5ரோம 7:4 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். கொலோ 2:8கலா 1:6எபே 4:141 யோவா 4:1கொலோ 2:4எபி 13:91 தீமோ 2:14வெளி 12:9 எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே. கலா 1:6-81 கொரி 3:111 தீமோ 2:5எபே 4:4-51 கொரி 12:4-11அப் 4:12கலா 3:2ரோம 8:15 மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன். 1 கொரி 15:102 கொரி 12:11-12கலா 2:6-9 நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே. 1 கொரி 1:17எபே 3:41 கொரி 1:212 கொரி 4:21 கொரி 2:1-31 கொரி 2:132 கொரி 10:102 கொரி 12:12 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ? 2 கொரி 12:131 கொரி 4:10-121 கொரி 9:61 தெச 2:92 கொரி 10:11 கொரி 9:14-182 தெச 3:8அப் 18:1-3 உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். 2 கொரி 11:9பிலி 4:14-16பிலி 4:18 நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன். 1 தெச 2:61 தெச 2:92 தெச 3:8-9பிலி 4:10-162 கொரி 12:13-162 கொரி 6:42 கொரி 8:1-22 கொரி 9:12 அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். ரோம 9:1அப் 18:12ரோம 1:92 கொரி 1:231 கொரி 16:151 கொரி 9:15-181 தெச 1:7-81 தெச 2:10 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார். 2 கொரி 12:152 கொரி 6:11-122 கொரி 7:32 கொரி 11:312 கொரி 12:2-3அப் 15:8எபி 4:13யோவா 2:24-25 மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். 1 கொரி 9:121 கொரி 5:61 தீமோ 5:142 கொரி 1:172 கொரி 10:172 கொரி 11:182 கொரி 11:92 கொரி 5:12 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். கலா 1:7வெளி 2:21 யோவா 4:1பிலி 3:2கலா 2:4அப் 20:302 கொரி 11:15கொலோ 2:4 அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. கலா 1:82 கொரி 2:112 கொரி 11:3வெளி 12:9மத் 4:1-10ஆதி 3:1-5 எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும். பிலி 3:192 கொரி 3:9வெளி 9:112 கொரி 11:232 பேது 2:13-222 பேது 2:3அப் 13:10ஏசா 9:14-15

பவுல் தன்னுடைய உபத்திரவத்தைக்குறித்து மேன்மைபாராட்டல்

பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள். 2 கொரி 11:12 கொரி 12:62 கொரி 11:192 கொரி 11:21-232 கொரி 12:11 இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். 1 கொரி 7:122 கொரி 9:4பிலி 3:3-61 கொரி 7:251 கொரி 7:62 கொரி 11:18-27 அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன். 1 கொரி 4:101 பேது 1:242 கொரி 10:12-182 கொரி 11:122 கொரி 11:21-232 கொரி 12:112 கொரி 12:5-62 கொரி 12:9 நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே. 1 கொரி 4:101 கொரி 10:151 கொரி 8:1வெளி 3:17 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. கலா 2:4கலா 4:3கலா 4:9கலா 5:12 கொரி 1:24ஏசா 50:6புலம் 3:30லூக் 6:29 நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன். 2 கொரி 10:102 கொரி 10:1-22 கொரி 11:172 கொரி 11:22-272 கொரி 13:10பிலி 3:3-6 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான். பிலி 3:5ரோம 11:1ரோம 9:42 நாளாக 20:7அப் 22:3யாத் 10:3யாத் 7:16யாத் 9:1 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். 2 கொரி 6:4-52 கொரி 1:9-102 கொரி 6:9கொலோ 1:241 கொரி 15:102 கொரி 11:24-252 கொரி 3:6அப் 9:16 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; மாற் 13:9உபா 25:2-3மத் 10:17 மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். அப் 14:19அப் 16:22-23அப் 16:33அப் 16:37அப் 27:1-44எபி 11:37அப் 14:5அப் 7:58-59 அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; அப் 14:5அப் 13:50அப் 17:5அப் 20:19அப் 25:32 கொரி 1:8-101 கொரி 15:321 தெச 2:15-16 பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 2 கொரி 6:5பிலி 4:121 தெச 2:92 தெச 3:81 கொரி 4:11-121 கொரி 7:52 கொரி 11:23அப் 13:2-3 இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. 1 கொரி 7:17ரோம 15:16அப் 20:18-35அப் 15:40-41அப் 18:23கொலோ 2:1ரோம 11:13ரோம 16:4 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ? 1 கொரி 8:131 கொரி 9:22கலா 4:8-201 கொரி 11:221 கொரி 12:261 கொரி 15:12-341 கொரி 15:361 கொரி 5:1-5 நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். 2 கொரி 12:5-111 கொரி 2:3எரே 9:23-24நீதி 25:272 கொரி 11:16-182 கொரி 12:1நீதி 27:2கொலோ 1:24 என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். எபே 1:3ரோம 9:51 பேது 1:32 கொரி 1:3கொலோ 1:3யோவா 10:30ரோம 1:25ரோம 15:6 தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்; 2 கொரி 11:26அப் 9:24-25 அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன். அப் 9:251 சாமு 19:12யோசு 2:18