ரோமர் 16

Romans 16
அத்தியாயம் 16

பவுலின் இறுதி அறிவுரை.

கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, அப் 18:181 பேது 1:22-231 தீமோ 5:9-101 தீமோ 5:2யாக் 2:15மத் 12:502 கொரி 3:1லூக் 8:3 எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள். பிலி 2:29பிலி 1:27மத் 10:40-421 தீமோ 2:102 யோவா 1:102 தீமோ 1:18அப் 9:36அப் 9:39 கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அப் 18:261 கொரி 16:192 தீமோ 4:191 கொரி 16:16ரோம 16:9அப் 18:2-17 அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். 1 யோவா 3:16பிலி 2:301 கொரி 16:11 கொரி 7:171 தெச 2:142 சாமு 22:41அப் 15:41அப் 16:5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். கொலோ 4:151 கொரி 16:19பிலே 1:21 கொரி 16:15மத் 18:202 கொரி 9:23 யோவா 1:1அப் 18:12 எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். 1 தீமோ 5:10மத் 27:55ரோம 16:12 அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும், யூனியாவையும் வாழ்த்துங்கள். ரோம 16:11ரோம 16:21கொலோ 4:10பிலே 1:232 கொரி 5:17எபே 2:10கலா 1:221 கொரி 1:30 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். 1 யோவா 3:14பிலி 4:1ரோம 16:5 கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். ரோம 16:2-3ரோம 16:21 கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள். ரோம 14:181 பேது 1:7உபா 8:21 கொரி 11:191 தீமோ 3:102 கொரி 2:92 கொரி 8:22பிலி 2:22 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள். ரோம 16:21ரோம 16:7 கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். 1 தெச 5:12-131 கொரி 15:581 கொரி 16:16எபி 6:10-111 கொரி 15:101 தெச 1:31 தீமோ 4:101 தீமோ 5:17-18 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். 1 தீமோ 5:22 யோவா 1:1மாற் 15:21யோவா 15:162 தெச 2:13எபே 1:4யோவா 19:27மத் 12:49-50 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள். 1 பேது 1:22-23கொலோ 1:2எபி 3:1ரோம 8:29 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். ரோம 16:2ரோம 1:71 பேது 1:2எபே 1:1ஏசா 60:21ரோம 16:14 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். 1 கொரி 16:201 தெச 5:262 கொரி 13:121 பேது 5:14அப் 20:37 அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். யூதா 1:192 தெச 3:61 தீமோ 6:3-52 தீமோ 3:5கொலோ 2:8தீத் 3:102 யோவா 1:7-112 தெச 3:14-15 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். கொலோ 2:4மத் 7:151 தீமோ 6:5மீகா 3:52 பேது 2:32 தீமோ 3:2-6பிலி 3:192 தெச 2:10 உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். மத் 10:161 கொரி 14:20யாக் 3:13-18பிலி 2:15ரோம 1:8எபே 5:17எரே 4:22பிலி 1:9 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென். லூக் 10:191 யோவா 3:8ஆதி 3:15மல்கி 4:3சகரி 10:5வெளி 12:10எபி 2:14-15வெளி 22:21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். அப் 20:4அப் 13:1அப் 17:5ரோம 16:11ரோம 16:71 தெச 1:11 தெச 3:21 தெச 3:6 இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கலா 6:111 கொரி 16:21ரோம 16:8கொலோ 3:17 என்னையும், சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். 1 கொரி 1:14அப் 19:222 தீமோ 4:203 யோவா 1:1-6அப் 19:29அப் 20:4 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, 1 கொரி 2:7கொலோ 1:26-27ரோம 2:16எபே 1:92 தெச 2:142 கொரி 4:3எபே 3:20-21எபே 3:3-5 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும், ரோம 1:5ரோம 15:18கலா 3:8ஏசா 40:281 தீமோ 1:172 தீமோ 1:10ஆதி 21:33தீத் 1:2-3 தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 1 தீமோ 1:17ரோம 11:36வெளி 7:10-12வெளி 19:1-6ரோம 11:33-341 பேது 2:5வெளி 1:5-6வெளி 5:9-14