ஆராதனைக்கான அறிவுரைகள்
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்; 2 தெச 1:3மத் 6:9-10யாக் 5:16எபே 5:20சங் 67:1-41 தீமோ 2:4தீத் 3:22 தீமோ 2:24 நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 1 பேது 2:9-13எரே 29:7எஸ்றா 6:10ரோம 13:1-7நீதி 24:211 தெச 4:11எபி 12:14நெகே 1:11 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது. எபி 13:161 பேது 2:201 தீமோ 1:1ரோம 14:181 பேது 2:51 தெச 4:1கொலோ 1:10லூக் 1:47 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். எசேக் 18:322 பேது 3:9எசேக் 18:23தீத் 2:11எசேக் 33:11யோவா 3:15-172 தீமோ 2:25ரோம 10:12-15 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 கொரி 8:6கலா 3:20எபி 9:15எபி 7:25உபா 6:4எபி 12:24யோவா 1:14ஏசா 44:6 எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. மத் 20:281 பேது 3:181 யோவா 2:1-21 யோவா 4:10கலா 4:4வெளி 1:51 கொரி 1:6எபே 5:2 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன். அப் 9:152 தீமோ 1:11ரோம 9:1எபே 3:7-8ரோம 15:16பிரச 12:8-10கலா 1:16கலா 1:20
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன். சங் 134:2சங் 63:4எபி 10:22தீத் 3:8யாக் 4:8லூக் 24:501 பேது 3:7ஏசா 1:15 பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல், 1 பேது 3:3-5தீத் 2:3-5எரே 4:30சங் 149:4ஏசா 3:162இராஜா 9:30ஏசா 3:18-24எரே 2:32 தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். 1 பேது 2:121 பேது 3:3-5அப் 9:36நீதி 31:31வெளி 2:192 பேது 1:6-82 பேது 3:11எபே 2:10 பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். 1 கொரி 14:34-35எபே 5:22-241 கொரி 11:3கொலோ 3:181 பேது 3:5-61 பேது 3:1ஆதி 3:16தீத் 2:5 உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். 1 கொரி 14:34 ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். 1 கொரி 11:8-9ஆதி 2:18ஆதி 1:27ஆதி 2:22ஆதி 2:7 மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 2 கொரி 11:3ஆதி 3:6ஆதி 3:12-13 அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள். தீத் 2:121 பேது 4:7ஆதி 3:15-161 தீமோ 1:51 தீமோ 2:9ஏசா 9:6லூக் 2:10-11ஏசா 7:14