ஏசாயா 3

Isaiah 3
அத்தியாயம் 3

எருசலேம் மற்றும் யூதாவிற்கு வரும் நியாயத்தீர்ப்பு

இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்; லேவி 26:26எசேக் 14:13எசேக் 4:16-17ஏசா 1:24ஏசா 2:22ஏசா 36:12ஏசா 5:13ஏசா 51:22 பராக்கிரமசாலியையும், போர்வீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், ஞானியையும், மூப்பனையும்; 2இராஜா 24:14-16ஏசா 9:14-15ஆமோ 2:3எசேக் 17:13எசேக் 8:12எசேக் 9:5ஏசா 2:13-15புலம் 5:12-14 ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார். 1 சாமு 8:12உபா 1:15யாத் 18:21நியாயாதி 8:18யாத் 4:10யாத் 4:14-16 வாலிபர்களை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள். பிரச 10:161 இராஜா 3:7-92 நாளாக 33:12 நாளாக 36:52 நாளாக 36:92 நாளாக 34:12 நாளாக 36:112 நாளாக 36:2 மக்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான். எரே 9:3-8மல்கி 3:52இராஜா 2:232 சாமு 16:5-9ஆமோ 4:1பிரச 10:5-7எசேக் 22:12எசேக் 22:6-7 அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டைச்சேர்ந்த தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு மேலாடை இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டிற்கு இணையான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல; ஏசா 4:1நியாயாதி 11:6-8யோவா 6:15 அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாக இருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை ஆடையுமில்லை; என்னை மக்களுக்கு அதிபதியாக ஏற்படுத்தவேண்டாம் என்பான். ஓசி 5:13உபா 32:40எசேக் 34:4ஆதி 14:22ஓசி 6:1ஏசா 58:12எரே 14:19புலம் 2:13 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. 1 கொரி 10:22எசேக் 9:9ஓசி 7:16மல்கி 3:13-152 நாளாக 28:182 நாளாக 28:5-72 நாளாக 33:112 நாளாக 33:6-7 அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள். ஆதி 13:13ஆதி 18:20-21எரே 6:151 சாமு 15:322இராஜா 9:30எசேக் 23:16ஆதி 19:5-9ஏசா 3:16 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள். சங் 128:1-2எபி 6:10கலா 6:7-8பிரச 8:12எசேக் 18:9-19உபா 28:1-14சங் 18:23-24மல்கி 3:18 துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். பிரச 8:13யாக் 2:13சங் 120:3-4சங் 28:4ஏசா 48:22ஏசா 65:13-15ஏசா 65:20நீதி 1:31 பிள்ளைகள் என் மக்களை ஒடுக்குகிறவர்களாக இருக்கிறார்கள்; பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். என் மக்களோ, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள். ஏசா 3:4நாகூ 3:132இராஜா 11:1ஏசா 28:14-15ஏசா 9:15-16எரே 5:31மத் 15:14எண் 6:23-27 யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார். மீகா 6:2ஓசி 4:1-2நீதி 22:22-23நீதி 23:10-11சங் 12:5 யெகோவா தமது மக்களின் மூப்பர்களையும், அவர்களுடைய பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சைத்தோட்டத்தை அழித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. யோபு 22:4ஆமோ 4:1ஏசா 3:2-3ஏசா 5:7யாக் 2:6எரே 5:27யோபு 24:9சங் 14:4 நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறார். மீகா 3:2-3சங் 94:5ஆமோ 2:6-7ஆமோ 8:4-6யாத் 5:14எசேக் 18:2ஏசா 58:4யோனா 1:6 பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள். ஏசா 32:9-11எசேக் 16:49-50நீதி 30:13ஏசா 4:4லூக் 23:28ஏசா 1:8ஏசா 24:4ஏசா 3:18 ஆதலால் ஆண்டவர் சீயோன் பெண்களின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; யெகோவா அவர்கள் மானத்தைக் குலைப்பார். எரே 13:22ஏசா 20:4லேவி 13:29-30லேவி 13:43-44மீகா 1:11வெளி 16:2உபா 28:27எசேக் 16:36-37 அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும், நியாயாதி 8:21நியாயாதி 8:26 ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும், எசேக் 16:11யாத் 35:22ஆதி 24:22ஆதி 24:30ஆதி 24:53ஆதி 38:18எண் 31:50ஆதி 38:25 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும், யாத் 39:28யாத் 32:2எசேக் 16:12ஆதி 35:4ஓசி 2:13 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், ஆதி 24:471 பேது 3:3-41 தீமோ 2:9-10எஸ்த 8:12எசேக் 16:12ஆதி 41:42யாக் 2:2லூக் 15:22 விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், கண்ணாடிகளையும், மெல்லிய ஆடைகளையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் கழற்றிப்போடுவார். 1 நாளாக 15:27யாத் 38:8எசேக் 16:10ஆதி 24:65ஆதி 41:42லூக் 16:19வெளி 19:14வெளி 19:8 அப்பொழுது, சுகந்தத்திற்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான உடைகளுக்குப் பதிலாக சணல்உடையும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும். எசேக் 27:31புலம் 2:101 பேது 3:3ஏசா 15:3ஏசா 22:12மீகா 1:16ஆமோ 8:10எஸ்த 2:12 உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள். 2 நாளாக 29:9ஆமோ 9:10ஏசா 1:20எரே 11:22எரே 14:18எரே 18:21எரே 19:7எரே 21:9 அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார். எரே 14:2புலம் 2:10புலம் 1:4யோபு 2:13எசேக் 26:16யோபு 2:8லூக் 19:44ஏசா 47:1