அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஆதி 30:23ஏசா 2:17ஏசா 13:12லூக் 1:25லூக் 21:222 தெச 3:121 சாமு 1:6ஏசா 10:20
யெகோவாவின் கிளை
இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். எரே 23:5சகரி 6:12சகரி 3:8ஏசா 27:6யோவே 2:32எரே 33:15ரோம 11:4-52 கொரி 4:6 அப்பொழுது ஆண்டவர், சீயோன் பெண்களின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, லூக் 10:20யாத் 32:32-33ஏசா 52:1ஏசா 60:21சங் 69:28வெளி 21:27கொலோ 3:12எசேக் 36:24-28 சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தங்கியிருந்து ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். மல்கி 3:2-3எசேக் 22:18-22எசேக் 36:25சகரி 13:9மத் 3:11-12எசேக் 36:29ஏசா 28:6மத் 23:37 அப்பொழுது யெகோவா சீயோன் மலையிலுள்ள எல்லா குடியிருப்புகளிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். யாத் 13:21-22நெகே 9:12யாத் 40:34-38எண் 9:15-22சங் 78:14ஏசா 33:20ஏசா 46:13ஏசா 60:1 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். ஏசா 25:4சங் 27:5ஏசா 32:2ஏசா 8:14நீதி 18:10எபி 11:7எபி 6:18ஏசா 32:18-19