மீட்கப்படுவதற்கான வாக்குத்தத்தம்
எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை அவனுக்கு உண்டாகி, அவர்: எரே 32:2-3எரே 37:21எரே 38:282 தீமோ 2:9எரே 32:8 இதைச் செய்கிற கர்த்தருமாய், இதை உறுதிப்படுத்த இதை உண்டாக்குகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் பெயருள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: யாத் 15:3யாத் 6:3ஏசா 37:26யாத் 3:14-15எபி 11:10ஏசா 14:32ஏசா 43:1ஏசா 43:21 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு பதில் கொடுத்து, நீ அறியாததும் உனக்கு புரியாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரே 29:12ஏசா 65:24எபே 3:20ஏசா 48:6சங் 91:15லூக் 11:9-10சங் 50:15உபா 4:29 கோட்டை மதில்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையும் குறித்து: எசேக் 4:2ஆப 1:10எரே 32:24எசேக் 21:22எசேக் 26:8 இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பின் காரணமாக நான் என் முகத்தை மறைத்ததினால் என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் வெட்டப்பட்ட மனிதச் சடலங்களினால் அவைகளை நான் நிறைப்பதற்காகவே, அவர்கள் கல்தேயருடன் போர் செய்யப்போகிறார்கள். ஏசா 8:17எரே 21:10எரே 21:4-7எரே 32:5உபா 31:17ஏசா 1:15-16ஏசா 64:7எரே 37:9-10 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரச்செய்து, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். யோவா 10:10ஏசா 30:26தீத் 3:5-6சங் 67:2ஓசி 6:1ஏசா 58:8கலா 5:22-23ஏசா 66:12 நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, ஆமோ 9:14-15ஏசா 1:26எரே 30:3எரே 29:14எரே 31:4எரே 32:44எரே 23:3எரே 24:6 அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை விலக்கிச் சுத்தப்படுத்தி, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, எனக்கு விரோதமாகத் துரோகம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். சகரி 13:1மீகா 7:18-19எசேக் 36:25எரே 31:34சங் 51:2வெளி 1:5எசேக் 36:331 யோவா 1:7-9 நான் அவர்களுக்குச் செய்யும் நன்மைகளையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா தேசங்களுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள புகழ்ச்சியாகவும் மகிமையாகவும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளும் எல்லா நன்மைக்காகவும், எல்லாச் சமாதானத்திற்காகவும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். ஏசா 60:5சங் 126:2-3செப்ப 3:17-20ஏசா 62:7எரே 13:11நெகே 6:16ஓசி 3:5ஏசா 62:12 மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும், எரே 32:43எசேக் 37:11எரே 32:36 இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1 நாளாக 16:34சங் 106:1சங் 107:1சங் 107:22எபி 13:152 நாளாக 29:312 நாளாக 5:13ஏசா 51:11 மனிதனும் மிருகமும் இல்லாமல் வெட்டவெளியாக கிடக்கிற இவ்விடத்திலும், இதை சுற்றியுள்ள பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்துத் திருப்புகிற இடங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 65:10எசேக் 34:12-15எரே 31:24எரே 36:29எரே 51:62செப்ப 2:6-7எசேக் 36:8-11எரே 17:26 மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களை எண்ணுகிறவனுடைய கைக்குள்ளாக நடந்துவரும் என்று யெகோவா சொல்லுகிறார். லேவி 27:32எரே 17:26லூக் 15:4யோவா 10:3-4 இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் மக்களுக்கும், யூதாவின் மக்களுக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். ஆகா 2:6-9எரே 23:51 நாளாக 17:13-142 கொரி 1:20ஆதி 49:10ஆமோ 9:11எசேக் 34:23-25ஆதி 22:18 அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதிற்கு நீதியின் கிளையை முளைக்கச்செய்வேன்; அவர் பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். எரே 23:5-6ஏசா 11:1-5ஏசா 4:2சகரி 3:8ஏசா 53:2சங் 72:1-52 சாமு 23:2-3எசேக் 17:22-23 அந்நாட்களில் யூதா காப்பாற்றப்பட்டு, எருசலேம் சுகமாகத் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற யெகோவா என்பது அவருடைய பெயர். எரே 23:61 கொரி 1:30ஏசா 45:172 கொரி 5:21பிலி 3:9ரோம 11:262 பேது 1:1ஏசா 45:22 இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத் தகுதியான மனிதன் தாவீதிற்கு இல்லாமற்போவதில்லை. 1 இராஜா 2:4லூக் 1:32-33சங் 89:29-371 நாளாக 17:11-141 இராஜா 8:25ஏசா 9:71 நாளாக 17:272 சாமு 7:14-16 தகனபலியிட்டு, உணவுபலி செலுத்தி, அனுதினமும் பலியிடும் மனிதன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். ஏசா 56:71 பேது 2:51 பேது 2:9உபா 18:1எசேக் 43:19-27எசேக் 44:9-11எசேக் 45:5எபி 13:15-16 பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: குறித்த நேரங்களில் பகல்நேரமும் இரவுநேரமும் உண்டாகாமலிருக்க, நீங்கள் பகல் நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும், இரவு நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும் பொய்யாக்கினால், ஆதி 8:22ஏசா 54:9-10சங் 89:37சங் 104:19-23எரே 31:35-37எரே 33:25-26 அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடன் நான் செய்த உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் மகன் அவனுக்கு இல்லாமற்போவதால் அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியருடனும் ஆசாரியருடனும் நான் செய்த உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும். சங் 89:342 நாளாக 7:182 நாளாக 21:72 சாமு 23:5லூக் 1:32-33லூக் 1:69-70மத் 24:35வெளி 5:10 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாக இருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியம் செய்கிற லேவியரையும் பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். ஆதி 22:17ஆதி 15:5எபி 11:12எசேக் 37:24-27ஏசா 66:21எரே 31:37எசேக் 44:15ஆதி 13:16 பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: யெகோவா தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த மக்கள் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் மக்கள் இனி ஒரு தேசமல்லவென்று அதை இழிவுபடுத்துகிறார்கள் என்பதை நீ காண்கிறதில்லையோ? நெகே 4:2-4சங் 44:13-14சங் 83:4எஸ்த 3:6-8எசேக் 25:3எசேக் 26:2எசேக் 36:2எசேக் 37:22 வானத்திற்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காக்காமல், பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் குறித்து நான் செய்த உடன்படிக்கை அழிந்துபோகிறது என்றால், எரே 31:35-36சங் 74:16-17எரே 33:20சங் 104:19ஆதி 8:22ஆதி 9:9-17 அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தகுதியானவர்களை அதிலிருந்து எடுக்காமல் வெறுத்துவிடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். எரே 31:37ஏசா 14:1ஓசி 2:23எசேக் 39:25ஓசி 1:7ஏசா 54:8எரே 31:20ஆதி 49:10