மனம்திரும்ப அழைப்பு
விரும்பப்படாத தேசமே, கட்டளையிடுவதற்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோவதற்குமுன்னும், யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இறங்குவதற்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருவதற்குமுன்னும், யோவே 1:142 நாளாக 20:4எஸ்த 4:16நெகே 8:1நெகே 9:1எரே 3:3எரே 6:15மத் 18:20 நீங்கள் உங்களை உணர்ந்து ஆராய்ந்து சோதியுங்கள். நாகூ 1:6ஓசி 13:3ஏசா 17:13புலம் 4:11சங் 1:42இராஜா 22:16-17யோபு 21:18செப்ப 1:18 தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள். ஆமோ 5:14-15ஏசா 26:20-21எரே 29:12-13சங் 76:9யோனா 3:9சங் 22:26ஏசா 55:6-7சங் 105:4
தேசங்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பு
காசா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். சகரி 9:5-7ஆமோ 1:6-8எரே 47:1-7எரே 25:20எசேக் 25:15-17எரே 15:8எரே 6:4சங் 91:6 கடற்கரை குடிமக்களாகிய கிரேத்தியருக்கு ஐயோ, பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, யெகோவாவுடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடி உன்னை அழிப்பேன். எசேக் 25:16எரே 47:7ஆமோ 3:1யோசு 13:3ஆமோ 5:1ஏசா 14:30நியாயாதி 3:3மாற் 12:12 கடற்கரை தேசம் மேய்ப்பர்கள் தங்கும் குடிசைகளும் ஆட்டுத் தொழுவங்களுமாகும். எசேக் 25:5ஏசா 17:2ஏசா 5:17செப்ப 2:14-15 அந்த தேசம் யூதா சந்ததியாரில் மீதியாக இருப்பவர்களுக்குச் சொந்தமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே மாலையிலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பை மாற்றுவார். யாத் 4:31செப்ப 3:20எசேக் 39:25லூக் 1:68மீகா 5:3-8ஆமோ 9:14-15எரே 29:14எரே 33:7 மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். எசேக் 25:3-11சங் 83:4-7ஆமோ 1:13எரே 48:27-29எரே 49:1எசேக் 36:2 ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப்போலுமாகி, நெருஞ்சிமுள் படரும் இடமும், உப்புப்பள்ளமும், நிரந்தர பாழுமாயிருக்கும்; என் மக்களில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா உரைக்கிறார். ஏசா 15:1-9ஏசா 11:14உபா 29:23ஏசா 25:10ஏசா 49:18எரே 48:1ஆமோ 1:13எசேக் 25:1-17 அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். ஏசா 16:6எரே 48:29செப்ப 2:81 பேது 5:5தானி 4:37தானி 5:20-23யாத் 10:3யாத் 9:17 யெகோவா அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். மீகா 4:1-3சகரி 13:2சகரி 14:9-21ஆதி 10:5ஓசி 2:17ஏசா 2:2-4ஏசா 24:14-16மல்கி 1:11 எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். எசேக் 30:4-9ஏசா 13:5ஏசா 18:1-7ஏசா 20:4-5ஏசா 43:3எரே 46:9-10எரே 51:20-23ஏசா 10:5 அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார். நாகூ 3:7ஏசா 10:12ஏசா 10:16நாகூ 1:1நாகூ 3:18-19எசேக் 31:3-18ஏசா 11:11மீகா 5:6 அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார். ஆமோ 9:1ஏசா 13:19-22ஏசா 34:11-17எரே 22:14ஏசா 14:23வெளி 18:2செப்ப 2:6 நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, பொறுப்பில்லாமல் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகங்கள் வசிக்குமிடமாகப் போய்விட்டதே! அதின் வழியாகப் போகிறவன் எவனும் தன் கைகளைத்தட்டி ஏளனம் செய்வான். எசேக் 28:2எசேக் 28:9ஏசா 22:2ஏசா 47:7-8நாகூ 3:191 இராஜா 9:7-8எரே 19:8புலம் 1:1