சங்கீதங்கள் 105

Psalms 105
சங்கீதம் 105

யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், ஏசா 12:4சங் 145:11-12ரோம 10:13சங் 106:11 நாளாக 16:34சங் 145:4-6சங் 96:31 நாளாக 29:13

அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; ஏசா 12:5-6சங் 119:27சங் 77:12சங் 98:5சங் 98:1எபே 5:19சங் 78:4-6உபா 6:6-9

அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; புலம் 3:25கலா 6:141 கொரி 1:29நீதி 8:171 கொரி 1:31ஏசா 45:25எரே 9:23-24லூக் 11:9-10

யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; சங் 27:8செப்ப 2:2-32 நாளாக 6:41ஆமோ 5:4-6சங் 132:8சங் 78:61

அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.

அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! சங் 77:11சங் 119:13உபா 32:7லூக் 22:19ஏசா 43:18-19உபா 8:2சங் 40:5வெளி 16:7

அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், ஏசா 44:1-2யோவா 15:161 பேது 2:9ஏசா 41:8உபா 7:6-8யாத் 3:6ஏசா 41:14சங் 105:42

அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, ஏசா 26:9உபா 26:17-18யாத் 20:2சங் 95:7வெளி 15:4உபா 29:10-15ஆதி 17:7யோசு 24:15-24

அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், உபா 7:9லூக் 1:72-74சங் 106:45சங் 111:51 நாளாக 16:15சங் 105:42தானி 9:4நெகே 1:5

ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,

அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். ஆதி 17:2ஆதி 22:16-18ஆதி 26:3எபி 6:17அப் 7:8கலா 3:17ஆதி 12:7ஆதி 28:13 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், 2 சாமு 23:5ஆதி 17:7-8ஆதி 28:13-15எபி 13:20

இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். ஆதி 13:15ஆதி 15:18சங் 78:55ஆதி 12:7ஆதி 26:3-4ஆதி 28:13

அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். உபா 7:7ஆதி 34:30எபி 11:9ஆதி 23:4உபா 26:5அப் 7:5எசேக் 33:24-33ஆதி 17:8

அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,

ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.

அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், ஆதி 35:5யாத் 7:16-17ஆதி 12:14-17ஆதி 20:1-7ஆதி 26:14-33ஆதி 31:24-29

அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், சகரி 2:8ஆதி 26:11ஆதி 20:71 யோவா 2:27ஆதி 49:8-33ஆதி 48:19-20ஆதி 27:39-401 இராஜா 19:16

என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். எசேக் 4:16ஏசா 3:1ஆதி 41:54லேவி 26:26அப் 7:112இராஜா 8:1ஆதி 47:13சங் 104:15

அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; அப் 7:9ஆதி 37:36ஆதி 45:4-5ஆதி 50:20ஆதி 37:27-28ஆதி 39:1ஆதி 45:7-8

யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அப் 16:24ஆதி 39:20ஆதி 40:15சங் 107:10

அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.

யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அப் 7:10நீதி 21:1ஆதி 40:20-21தானி 2:30ஆதி 41:11-16ஆதி 41:25சங் 44:4

அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; ஆதி 41:14

மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.

தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், ஆதி 41:40-44ஆதி 41:55ஆதி 45:26ஆதி 45:8

தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், ஆதி 41:33ஆதி 41:38ஆதி 41:44ஏசா 19:11

தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.

அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; அப் 13:17அப் 7:11-15சங் 106:22சங் 78:51ஆதி 45:9-11ஆதி 46:2-7ஆதி 47:6-9ஆதி 10:6

யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.

அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அப் 7:17உபா 26:5யாத் 1:7-9யாத் 12:37ஆதி 46:3எபி 11:12ஆதி 13:16

அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.

தம்முடைய மக்களைப் பகைக்கவும், அப் 7:19ஆதி 15:13யாத் 9:16யாத் 1:16ரோம 9:17-19உபா 2:30யாத் 1:8-14யாத் 10:1

தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும்,

அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். யாத் 3:10யாத் 28:1-2யாத் 28:12யாத் 28:29-38யாத் 29:5-46யாத் 7:1எண் 16:401 சாமு 12:6

இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், சங் 78:43-51நெகே 9:10-11ஏசா 63:11-12எரே 32:20-21உபா 4:34யாத் 7:1-11சங் 105:23சங் 105:28

காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; சங் 99:72 பேது 2:172 பேது 2:4யோவே 2:31லூக் 23:44-45யாத் 10:21-23எசேக் 2:4-8யோவே 2:2

அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, யாத் 7:20-21சங் 78:44வெளி 16:3எசேக் 29:4-5ஏசா 50:2

அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.

அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; யாத் 8:3-14வெளி 16:13-14சங் 78:45

அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. யாத் 8:21-24யாத் 8:16-18ஏசா 7:18சங் 78:45

அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, சங் 78:47-48யாத் 9:18-28வெளி 11:19வெளி 16:21வெளி 8:7

அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.

அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, சங் 78:47வெளி 9:4

அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, யாத் 10:12-15யோவே 2:25சங் 78:46யோவே 1:4-7வெளி 9:3-10

அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து,

அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், ஆதி 49:3எபி 11:28சங் 136:10யாத் 11:4-5யாத் 12:12யாத் 12:29-30யாத் 4:23சங் 135:8

அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.

அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; யாத் 12:35-36யாத் 3:22அப் 13:17ஆதி 15:14

அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். யாத் 12:33யாத் 15:16யோசு 2:9ஆதி 35:5யாத் 10:7

அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, நெகே 9:12ஏசா 4:5சங் 78:14யாத் 13:21-22யாத் 14:24நெகே 9:191 கொரி 10:1-2எண் 9:15-22

இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.

இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; சங் 78:18உபா 8:3யோவா 6:31-33யோவா 6:48-58யோசு 5:12நெகே 9:20எண் 11:31-33சங் 78:23-28

வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. 1 கொரி 10:4எண் 20:11யாத் 17:6ஏசா 48:21சங் 114:8சங் 78:15-16சங் 78:20நெகே 9:15

அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், யாத் 2:24லூக் 1:72-73ஆதி 12:7லூக் 1:54-55யாத் 32:13ஆதி 13:14-17மீகா 7:20உபா 9:27

தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், ஏசா 35:10அப் 13:17அப் 7:36ஏசா 55:12எரே 31:11-12உபா 4:37-38யாத் 15:1-21ஏசா 51:10-11

தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,

தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், யோசு 24:13சங் 78:55உபா 6:10-11யோசு 11:23யோசு 24:8சங் 44:2-3யோசு 23:4நெகே 9:22-25

தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; உபா 4:40தீத் 2:14எபே 2:8-10உபா 4:1சங் 106:1வெளி 19:3-4உபா 5:33உபா 6:21-25

அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

அல்லேலூயா.