வெளிப்படுத்தின விசேஷம் 18

Revelation 18
அத்தியாயம் 18

பாபிலோனின் வீழ்ச்சி

இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது. எசேக் 43:2லூக் 17:242 தெச 2:8ஏசா 60:1-3வெளி 10:1வெளி 17:1வெளி 21:23வெளி 17:7 அவன் அதிக சத்தமிட்டு: எரே 51:8வெளி 14:8எரே 51:37எரே 50:39-40எரே 51:60-64ஏசா 13:19-22ஏசா 21:8-9வெளி 16:19

“மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது!

அது பேய்களுடைய குடியிருப்பும்,

எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும்,

அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது.

அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; வெளி 14:8வெளி 17:2வெளி 18:9எரே 51:7வெளி 18:232 பேது 2:1-3புலம் 4:5வெளி 18:11-17

பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்;

பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: 2 கொரி 6:17ஏசா 52:11எரே 51:6எரே 51:45எரே 50:8ஏசா 48:201 தீமோ 5:222 யோவா 1:11

“என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும்,

அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, எஸ்றா 9:6ஆதி 18:20-21எரே 51:9வெளி 16:19யோனா 1:22 நாளாக 28:9

அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார்.

அவள் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் அவளுக்குச் செய்யுங்கள்; எரே 50:29சங் 137:8எரே 50:15எரே 51:24வெளி 14:10வெளி 16:19எரே 16:18எரே 17:18

அவளுடைய செய்கைகளுக்கு தகுந்தவாறு அவளுக்கு இரண்டுமடங்காகக் கொடுங்கள்;

அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரண்டுமடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ ஏசா 47:7-9செப்ப 2:15எசேக் 28:2-10புலம் 1:12 தெச 2:4-8எரே 13:18ஏசா 22:12-14ஏசா 47:1-2

அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.

நான் அரசியாக இருக்கிறேன்;

நான் விதவைப் பெண் இல்லை,

நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள்.

எனவே அவளுக்கு வரும் வாதைகளாகிய மரணமும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; எரே 50:31எரே 50:34வெளி 17:16வெளி 18:9-101 கொரி 10:22ஏசா 47:9-11எரே 51:58எரே 51:6

அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்;

அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை உள்ளவர்.

“அவளுடன் வேசித்தனம்செய்து செல்வச்செழிப்பாய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் அக்கினியில் வேகிறதினால் உண்டான புகையைப் பார்க்கும்போது அவளுக்காக அழுது புலம்பி, வெளி 18:3வெளி 19:3வெளி 17:2வெளி 18:18எசேக் 26:16-17வெளி 14:11வெளி 18:20ஆதி 19:28 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: வெளி 18:19வெளி 18:8வெளி 18:15-17வெளி 14:8ஆமோ 5:16யோவே 1:15எரே 30:7எரே 51:8-9

ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே!

ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.

“பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும், வெளி 18:3எசேக் 27:27-36வெளி 18:23எசேக் 26:17-21வெளி 13:16-17வெளி 18:15வெளி 18:20செப்ப 1:11 எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும், வெளி 17:41 இராஜா 10:11-12எசேக் 27:5-25நீதி 8:10-112 நாளாக 2:8 இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள். எசேக் 27:13ஆமோ 2:62 பேது 2:3நெகே 5:8உபா 24:7யாத் 21:16ஏசா 50:11 தீமோ 1:10 உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை. 1 கொரி 10:61 யோவா 2:16-17யாக் 4:2லூக் 12:20லூக் 16:25எண் 11:4சங் 106:14சங் 78:18 இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று; வெளி 18:3அப் 19:24-27எசேக் 27:31வெளி 18:10-11அப் 16:19ஆமோ 5:16-17ஓசி 12:7-8மாற் 11:17

ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, வெளி 17:4லூக் 16:19-31வெளி 18:10-11வெளி 18:19

பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும்

சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.

கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று, எசேக் 27:27-36ஏசா 23:14வெளி 17:16எரே 51:8யோனா 1:6வெளி 18:10-11வெளி 18:19ஏசா 47:9 அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, வெளி 13:4வெளி 18:9-10எசேக் 27:30-32ஏசா 23:8-9எரே 51:37 தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: வெளி 18:10யோசு 7:6எசேக் 27:30யோபு 2:12வெளி 18:31 சாமு 4:12வெளி 18:82 சாமு 13:19

ஐயோ, மகா நகரமே!

கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே!

ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள்.

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! வெளி 6:10லூக் 18:7-8வெளி 12:12வெளி 19:1-32 பேது 3:2ஏசா 26:21எபே 2:20எபே 4:11

தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள்.

உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான். அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: எரே 51:63-64எசேக் 26:21வெளி 5:2தானி 11:19யோபு 20:8வெளி 12:8வெளி 16:20வெளி 18:22

“இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு,

இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும்.

சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், எசேக் 26:13எரே 25:10எரே 16:9எரே 7:34ஏசா 24:8-9பிரச 12:4எரே 33:11

நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை;

எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்;

எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; வெளி 18:3ஏசா 23:8நாகூ 3:4எரே 7:34வெளி 22:152இராஜா 9:22எசேக் 27:33-34எரே 16:9

மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே;

உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.

தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் வெளி 17:6வெளி 16:6எரே 51:49அப் 7:52வெளி 19:2மத் 23:27தானி 7:21மத் 23:35

பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான்.