ஞானம் அழைக்கிறது
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? நீதி 1:20-21மத் 3:3யோவா 7:37அப் 1:8நீதி 9:1-3ஏசா 49:1-6ஏசா 55:1-3லூக் 24:47
புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
அது வழியருகே உள்ள மேடைகளிலும், நீதி 9:14நீதி 9:3
நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: யோபு 29:7அப் 5:20யோவா 18:20லூக் 14:21-23மத் 22:9
மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; மத் 11:15யோவா 3:16சங் 49:1-3சங் 50:1வெளி 22:171 தீமோ 2:4-62 கொரி 5:19-20கொலோ 1:23
என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
பேதைகளே, விவேகம் அடையுங்கள்; நீதி 1:22அப் 26:18நீதி 9:4வெளி 3:17-181 கொரி 6:9-11நீதி 1:4சங் 19:71 கொரி 1:28
மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; கொலோ 1:26மத் 7:28-29மத் 13:35நீதி 4:2நீதி 23:161 கொரி 2:6-7யோபு 33:1-3மத் 5:2-12
என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், சங் 37:30யோவா 8:14யோவா 17:17நீதி 12:22யோவா 1:17யோவா 18:37யோவா 8:45-46யோபு 36:4
ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; யோவா 7:46நீதி 8:13சங் 12:6உபா 32:5ஏசா 45:23ஏசா 63:1
அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், நீதி 14:6யாக் 1:5யோவா 7:17யோவா 6:45சங் 25:12-14மத் 13:11-12நீதி 15:24நீதி 18:1-2
ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், நீதி 2:4-5சங் 119:127சங் 119:72நீதி 23:23நீதி 3:13-15அப் 3:6பிரச 7:11நீதி 10:20
சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
முத்துக்களைவிட ஞானமே நல்லது; நீதி 3:14-15நீதி 4:5-7நீதி 16:16சங் 119:127சங் 19:10யோபு 28:15-19மத் 16:26நீதி 20:15
ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல.
ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, ஏசா 28:26யாத் 35:30யாத் 31:3-6நீதி 1:4ரோம 11:331 நாளாக 28:19கொலோ 2:3எபே 1:11
நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; சங் 97:10நீதி 16:61 சாமு 2:3நீதி 4:241 தெச 5:221 பேது 5:5ஆமோ 5:15சங் 119:128
பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும்,
மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; பிரச 7:19ஏசா 9:6ஏசா 40:14ரோம 11:33-34கொலோ 2:3பிரச 9:16-18நீதி 2:6-7நீதி 24:5
நானே புத்தி, வல்லமை என்னுடையது.
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், ரோம 13:1தானி 2:21மத் 28:18வெளி 19:16தானி 4:32தானி 5:18-31தானி 7:13-14எரே 27:5-7
பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும்,
பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; யோவா 14:23யோவா 14:21சங் 91:14ஏசா 55:61 யோவா 4:191 சாமு 2:30மத் 7:7-8மத் 6:33
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதி 3:16மத் 6:33லூக் 16:11-12பிலி 4:19எபே 3:8லூக் 10:42வெளி 3:181 தீமோ 6:17-19
நீதியும் என்னிடத்தில் உண்டு.
பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; நீதி 10:20நீதி 3:14பிரச 7:12நீதி 8:10
சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், யோவா 10:27-28உபா 5:32சங் 32:8நீதி 4:11-12ஏசா 2:3நீதி 3:6நீதி 6:22சங் 25:4-5
அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
அவர்களை நீதியின் வழியிலும், 1 பேது 1:4நீதி 24:4ஆதி 15:14மத் 25:461 சாமு 2:8எபி 10:34நீதி 1:13சங் 16:11
நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
யெகோவா தமது செயல்களுக்குமுன் கொலோ 1:17யோவா 1:1-2நீதி 3:19சங் 104:24யோபு 28:26-28
ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
பூமி உண்டாவதற்குமுன்னும், யோவா 17:24ஆதி 1:26யோவா 17:5மீகா 5:2சங் 2:61 யோவா 1:1-2எபே 1:10-11
ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். 1 யோவா 4:9நீதி 3:20ஆதி 1:2எபி 1:5யோவா 1:14யோவா 3:16யோவா 5:20சங் 2:7
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், சங் 90:2யோபு 15:7-8யோபு 38:4-11சங் 102:25-28எபி 1:10
குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் ஆதி 1:1-31
நான் உருவாக்கப்பட்டேன்.
அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; ஏசா 40:22யோபு 26:10நீதி 3:19கொலோ 1:16சங் 136:5ஏசா 40:11எரே 10:12எபி 1:2
அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,
உயரத்தில் மேகங்களை அமைத்து,
சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி சங் 104:9எரே 5:22ஆதி 1:9-10சங் 104:5சங் 33:7யோபு 38:4-11
அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; யோவா 1:1-3யோவா 1:18மத் 3:17ஏசா 42:1யோவா 12:28யோவா 16:28கொலோ 1:13மத் 17:5
எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து,
எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, சங் 16:3யோவா 13:1சங் 40:6-82 கொரி 8:9யோவா 4:34
மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; லூக் 11:28சங் 119:1-2சங் 1:1-4சங் 128:1நீதி 5:7நீதி 7:24
என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; நீதி 4:1சங் 81:11-12நீதி 1:8நீதி 5:1நீதி 1:2-3ரோம 10:16-17எபி 12:25ஏசா 55:1-3
அதைவிட்டு விலகாமல் இருங்கள்.
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, லூக் 11:28மத் 7:24நீதி 3:13அப் 2:42லூக் 10:39சங் 27:4அப் 17:11-12சங் 84:10
என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து,
எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யோவா 3:361 யோவா 5:11-12நீதி 12:2பிலி 3:8யோவா 17:3கொலோ 3:3நீதி 3:13-18யோவா 14:6
யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, நீதி 15:32நீதி 1:311 கொரி 16:22யோவா 15:23-24நீதி 12:1நீதி 20:2எபி 10:29யோவா 3:19-20
தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்;
என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.