சங்கீதங்கள் 2

Psalms 2
சங்கீதம் 2

தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? அப் 4:25-26வெளி 17:14சங் 46:6சங் 21:11சங் 83:4-8அப் 17:5-6மத் 21:38லூக் 22:22-23

மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?

யெகோவாவுக்கு விரோதமாகவும், மத் 26:59மத் 27:1வெளி 17:12-14லூக் 23:11-12சங் 45:7அப் 10:38நீதி 21:30யோவா 1:41

அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும்,

பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று,

அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:

அவர்களுடைய கட்டுகளை அறுத்து, எரே 5:5லூக் 19:141 பேது 2:7-8லூக் 19:27

அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.

பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; சங் 37:13சங் 59:8நீதி 1:26ஏசா 40:22சங் 11:4ஏசா 57:15சங் 115:3சங் 53:5

ஆண்டவர் அவர்களை இகழுவார்.

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். ஏசா 11:4வெளி 19:15சங் 110:5-6சங் 21:9சங் 78:49-50லூக் 19:27ஏசா 66:6சகரி 1:15

தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.

நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். வெளி 14:1மத் 28:18எபே 1:22ஏசா 9:6-7சங் 45:6எபி 12:22சங் 110:1-2சங் 48:1-2

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; எபி 5:5அப் 13:33எபி 1:5-6மத் 3:17மத் 17:5சங் 89:27ரோம 1:4யோவா 3:16

யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன்,

இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;

என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், சங் 22:27சங் 89:27சங் 72:8யோவா 17:4-5தானி 7:13

பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, வெளி 12:5வெளி 2:26-27சங் 89:23வெளி 19:15ஏசா 30:14சங் 110:5-6சங் 21:8-9தானி 2:44

குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், ஓசி 14:9ஏசா 60:10-11ஏசா 52:15ஏசா 60:3சங் 45:12சங் 72:10-11சங் 82:1-8ஏசா 49:23

பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.

பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், பிலி 2:12எபி 12:25எபி 12:28-29சங் 119:119-120சங் 89:7எபி 4:1-2சங் 97:1சங் 95:1-8

நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.

தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, சங் 40:4யோவா 5:23சங் 34:8சங் 84:12ஏசா 30:18நீதி 16:202 தெச 1:8-9எரே 17:7

தேவனை முத்தம்செய்யுங்கள்;

கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்;

அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.