எபிரெயர் 1

Hebrews 1
அத்தியாயம் 1

தீர்க்கதரிசிகளிலும் மேலானவர்

முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், 2 பேது 1:20-21யோவே 2:28எண் 12:6-8லூக் 24:271 பேது 1:10-12ஆதி 46:2-4லூக் 1:55அப் 2:30 இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். யோவா 1:31 கொரி 8:6கொலோ 1:16-18யோவா 1:141 பேது 1:20மத் 28:18யோவா 13:3பிலி 2:9-11 இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். கொலோ 1:15-17வெளி 4:11யோவா 14:9-10யோவா 1:142 கொரி 4:4எபி 10:12எபி 12:2யோவா 1:4 இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். எபே 1:21பிலி 2:9-111 பேது 3:22எபி 2:9வெளி 5:11-122 தெச 1:7சங் 2:7-8கொலோ 1:18 எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? சங் 2:7அப் 13:33எபி 5:52 சாமு 7:141 நாளாக 17:131 நாளாக 22:10சங் 89:26-271 நாளாக 28:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 1 பேது 3:22உபா 32:43சங் 97:7கொலோ 1:18கொலோ 1:15யோவா 1:14வெளி 5:9-12வெளி 1:5 தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. சங் 104:4எபி 1:142இராஜா 6:172இராஜா 2:11எசேக் 1:13-14சகரி 6:5தானி 7:10ஏசா 6:2 குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. சங் 45:6-7ஏசா 9:6-7எரே 23:5-6ரோம 9:51 யோவா 5:20யோவா 10:30ஏசா 7:14மத் 1:23 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; சங் 45:7சங் 23:5ஏசா 61:3கலா 5:22ஏசா 61:1ரோம 15:13ஆமோ 5:15லூக் 4:18 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; சங் 102:25-27ஆதி 1:1யோவா 1:1-3எரே 32:17ஏசா 48:13சங் 8:3-4ஏசா 42:5சகரி 12:1 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்; ஏசா 51:6மாற் 13:31லூக் 21:33மத் 24:35ஏசா 34:4வெளி 21:1சங் 10:16ஏசா 65:17 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. சங் 102:26-27எபி 13:8யாக் 1:17யோவா 8:58யாத் 3:14சங் 90:4 மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? சங் 110:1மாற் 12:36எபி 10:12-13மத் 22:441 கொரி 15:25-26அப் 2:34-36எபி 1:3அப் 7:55 அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா? சங் 34:7சங் 103:20-21சங் 91:11-12தானி 6:22மத் 18:10அப் 27:23அப் 5:19அப் 10:3-4