தேவனின் வெளிப்பாடு
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிப்பதற்காக, தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான காரியம். வெளி 22:16வெளி 22:6கலா 1:12ஆமோ 3:7தானி 2:28-29வெளி 1:19எபே 3:3வெளி 1:9 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் பார்த்த எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். யோவா 19:351 கொரி 1:61 யோவா 1:1யோவா 21:24வெளி 1:19வெளி 12:17அப் 26:16வெளி 1:9 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் நெருங்கிவிட்டது. லூக் 11:28வெளி 22:10ரோம 13:111 பேது 4:7நீதி 8:34வெளி 22:6-7தானி 12:12-13யாக் 5:8-9
வாழ்த்துதல்
யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், ஏசா 11:2யோவா 1:1எபி 13:8சங் 90:2வெளி 5:6வெளி 4:5வெளி 1:8வெளி 3:1 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சங் 89:27எபி 9:141 யோவா 1:7வெளி 17:14கொலோ 1:181 பேது 1:19அப் 26:23வெளி 19:16 நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளி 5:10வெளி 20:6யாத் 19:61 பேது 2:5-9ஏசா 61:6வெளி 5:12-14ரோம 11:362 பேது 3:18 இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென். மத் 24:30சகரி 12:10தானி 7:13யோவா 19:37மாற் 14:62லூக் 21:271 தெச 4:171 தெச 1:10 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார். ஏசா 44:6வெளி 22:13ஏசா 48:12ஏசா 43:10வெளி 21:6ஏசா 41:4வெளி 1:4வெளி 11:17
மனிதகுமாரனுக்கு ஒப்பானவர்
உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். அப் 14:22வெளி 3:10யோவா 16:33வெளி 1:2பிலி 4:14வெளி 13:10வெளி 7:142 தீமோ 1:8 கர்த்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். வெளி 21:102 கொரி 12:2-4வெளி 4:1-2வெளி 17:3அப் 20:7வெளி 10:3-81 கொரி 16:2அப் 10:10-33 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது. கொலோ 4:15-16ஆப 2:2எரே 30:2வெளி 3:1எபே 1:1ஏசா 30:8வெளி 1:4வெளி 2:12 அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், சகரி 4:2யாத் 25:37வெளி 1:20வெளி 1:13எசேக் 43:5-6மீகா 6:9 அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன். தானி 7:13தானி 10:16தானி 10:5-6யாத் 28:6-8வெளி 15:6லேவி 8:7வெளி 14:14தானி 7:9 அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; தானி 10:6தானி 7:9வெளி 19:12வெளி 2:18மத் 28:3 அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. எசேக் 43:2தானி 10:6வெளி 14:2வெளி 19:6வெளி 2:18சங் 93:4எசேக் 1:7எசேக் 40:3 தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. எபி 4:12வெளி 2:12வெளி 19:15வெளி 2:16எபே 6:17ஏசா 49:2வெளி 19:21மத் 17:2 நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; ஏசா 44:6தானி 10:8-10வெளி 22:13தானி 8:17-18ஏசா 41:4ஏசா 48:12வெளி 2:8தானி 10:17-19 மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். ரோம 6:9எபி 7:25ரோம 14:8-9சங் 68:20ஏசா 22:22வெளி 3:7வெளி 20:1-2எபி 12:2 நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது; வெளி 4:1-11வெளி 1:11 என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள். வெளி 2:1வெளி 3:1வெளி 1:16சகரி 4:2வெளி 3:7வெளி 3:14வெளி 1:12-13வெளி 2:12