ரோமர் 14

Romans 14
அத்தியாயம் 14

நியாயந்தீர்த்தல்

விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள். ரோம 15:11 கொரி 8:7-131 கொரி 9:22ரோம 15:7ரோம 14:211 கொரி 3:1-2ஏசா 35:3-4ஏசா 40:11 ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான். 1 தீமோ 4:4நீதி 15:17ரோம 14:14கலா 2:12ரோம 14:22-23ஆதி 9:31 கொரி 10:25எபி 13:9 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. ரோம 14:10கொலோ 2:16-17லூக் 18:91 கொரி 10:29-30ரோம 14:13அப் 10:341 கொரி 8:11-13அப் 10:44 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே. யாக் 4:11-12ரோம 9:20ரோம 8:31-39யூதா 1:241 கொரி 4:4-5யோவா 10:28-30சங் 37:24எபி 7:25 அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும். கொலோ 2:16-17கலா 4:9-10ரோம 14:231 கொரி 8:71 யோவா 3:19-21ரோம 14:141 கொரி 8:11 நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான். 1 கொரி 10:30-311 தீமோ 4:3-5யாத் 12:14யாத் 12:42யாத் 16:25கலா 4:10ஏசா 58:5யோவா 6:28 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை. 1 பேது 4:22 கொரி 5:151 கொரி 6:19-201 தெச 5:10தீத் 2:14கலா 2:19-20பிலி 1:20-24ரோம 14:9 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம். பிலி 1:201 தெச 5:10அப் 21:131 கொரி 15:23வெளி 14:13பிலி 2:17அப் 13:36அப் 20:24 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார். வெளி 1:18லூக் 24:26எபி 12:2யோவா 5:22-231 பேது 1:211 பேது 4:52 தீமோ 4:1அப் 10:42 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 2 கொரி 5:101 கொரி 4:5பிரச 12:14ரோம 2:16ரோம 14:3-4யோவா 5:22மத் 25:31-32அப் 10:42 அப்படியே: ஏசா 45:22-25பிலி 2:10-11சங் 72:11ரோம 10:91 யோவா 4:15மத் 10:32ஏசா 49:18ரோம 15:9

“முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும்,

நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான். மத் 12:361 பேது 4:5மத் 16:27கலா 6:5பிரச 11:9லூக் 16:2மத் 18:23-35 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். 2 கொரி 6:31 கொரி 8:9-13யாக் 4:11லூக் 17:2ரோம 16:17யாக் 2:4ரோம 14:10ஏசா 57:14 எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும். தீத் 1:151 தீமோ 4:4ரோம 14:21 கொரி 8:7அப் 10:14-15அப் 11:8-91 கொரி 8:10அப் 10:28 ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 1 கொரி 8:11-12கலா 5:13பிலி 2:2-41 கொரி 13:4-51 கொரி 8:1எபே 5:2ரோம 14:20ரோம 15:2 உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள். 1 கொரி 10:29-301 தெச 5:22ரோம 12:172 கொரி 8:20-21 தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது. மத் 6:33ரோம 15:131 கொரி 4:201 கொரி 8:8கலா 5:22ரோம 8:61 தெச 2:12தானி 2:44 இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான். 2 கொரி 8:211 பேது 2:201 பேது 2:52 கொரி 5:111 தெச 1:3-41 கொரி 7:221 பேது 3:161 தீமோ 2:3 எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். எபே 4:29ரோம 12:18சங் 34:14ரோம 15:2எபி 12:141 தெச 5:11-122 கொரி 13:11கொலோ 3:12-15 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும். ரோம 14:14-15மத் 18:6தீத் 1:15அப் 10:151 கொரி 10:31-331 கொரி 6:12-13ரோம 14:211 தீமோ 4:3-5 இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும். 1 கொரி 8:13ரோம 14:13ரோம 15:1-2லூக் 17:1-2மல்கி 2:8மத் 16:23மத் 18:7-10எபி 12:13 உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 1 யோவா 3:21ரோம 14:5யாக் 3:13கலா 6:1ரோம 14:23ரோம 14:14ரோம 14:22 கொரி 1:12 ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே. எபி 11:6தீத் 1:151 கொரி 11:29-311 கொரி 8:7ரோம 14:5ரோம 13:2