கலாத்தியர் 2

Galatians 2
அத்தியாயம் 2

பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்

பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன். கலா 2:31 கொரி 9:62 கொரி 8:162 கொரி 8:23அப் 11:25அப் 11:30அப் 12:25அப் 13:2 நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன். கலா 2:6பிலி 2:161 தெச 3:51 கொரி 1:231 கொரி 9:26கலா 2:91 கொரி 2:21 கொரி 9:24 ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை. அப் 16:3கலா 5:2-61 கொரி 9:20-212 கொரி 2:13அப் 15:24 கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது. கலா 5:1யூதா 1:41 யோவா 4:12 பேது 2:1-22 கொரி 11:26கலா 5:12-13கலா 4:3கலா 4:9-10 நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. கலா 2:14கலா 4:16கொலோ 1:5கொலோ 2:4-8எபே 1:13கலா 3:1-2யூதா 1:31 தெச 2:13 அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே. கலா 2:2அப் 10:34ரோம 2:112 கொரி 12:111 பேது 1:172 கொரி 11:5கலா 6:32 கொரி 11:21-23 அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால், 1 தெச 2:4அப் 9:151 தீமோ 2:7கலா 1:161 தீமோ 1:112 தீமோ 1:11அப் 13:46-48கலா 2:9 விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து; அப் 22:21அப் 9:15அப் 15:12அப் 19:11-12அப் 2:14-41அப் 21:191 கொரி 15:101 கொரி 9:2 எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து, ரோம 12:3வெளி 3:12எபே 3:8கலா 2:21 யோவா 1:3அப் 15:22-30கலா 2:6-7வெளி 21:14-20 ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன். 1 யோவா 3:17அப் 24:17எபி 13:162 கொரி 8:1-91 கொரி 16:1-2அப் 11:29-30ரோம 15:25-27யாக் 2:15-16

பவுல் பேதுருவை எதிர்த்தல்

மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன். 1 தீமோ 5:20அப் 15:1கலா 2:142 கொரி 5:161 யோவா 1:8-102 கொரி 11:21-282 கொரி 12:11அப் 15:30-35 எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். அப் 10:28லூக் 15:2அப் 11:2-3எபே 3:6கலா 2:9ஏசா 57:11மத் 26:69-75நீதி 29:25 மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான். 1 கொரி 15:33எபி 13:9எபே 4:141 கொரி 5:61 கொரி 8:9அப் 4:36பிரச 10:1ஆதி 12:11-13 இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? அப் 10:28கலா 2:5அப் 15:10-111 தீமோ 5:20அப் 15:28-29கலா 6:12நீதி 2:7சங் 84:11 யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். எபே 2:3தீத் 3:3ரோம 3:9எபே 2:11-12யோவா 8:39-41பிலி 3:4ரோம 4:161 சாமு 15:18 நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. பிலி 3:9சங் 143:2ரோம 3:19-281 பேது 1:18-21ரோம 9:30அப் 13:38-391 பேது 3:181 யோவா 2:1-2 கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே. ரோம 6:1-21 யோவா 3:8-101 யோவா 3:5கலா 2:15மத் 1:21ரோம 11:7ரோம 9:30-332 கொரி 3:7-9 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன். கலா 4:9-12கலா 2:4-5கலா 2:12-16கலா 2:21ரோம 14:151 கொரி 8:11-12கலா 5:11 தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. ரோம 7:4ரோம 6:21 தெச 5:102 கொரி 5:15ரோம 6:11ரோம 3:19-20ரோம 14:7-8ரோம 8:2 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலா 5:242 கொரி 5:15ரோம 6:4-6கொலோ 3:3-42 கொரி 4:10-11ரோம 6:8கலா 6:142 கொரி 13:5 நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. ரோம 11:6கலா 3:21எபி 7:111 கொரி 15:14கலா 2:16கலா 5:2-4ஏசா 49:4ரோம 10:3