சாந்தமுள்ள ஆவியோடு சகோதரர்களைச் சீர்படுத்துதல்
சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. ரோம 15:12 தீமோ 2:252 தெச 3:15யாக் 5:19-20யூதா 1:22-231 யோவா 5:162 கொரி 2:7எசேக் 34:16 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். ரோம 15:11 தெச 5:14யோவா 13:341 யோவா 4:21யாக் 2:8யோவா 15:12கலா 5:13-14யோவா 13:14-15 ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான். நீதி 26:121 கொரி 8:21 கொரி 3:18ரோம 12:32 கொரி 3:51 கொரி 13:2யாக் 1:22லூக் 18:11 அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும். 2 கொரி 13:5சங் 26:21 கொரி 11:282 கொரி 1:122 கொரி 11:12-131 யோவா 3:19-221 கொரி 3:21-23லூக் 18:11 அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. எரே 32:19ரோம 14:10-122 கொரி 5:10-11வெளி 2:23ரோம 2:6-91 கொரி 3:81 கொரி 4:5மத் 16:27 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். 1 தீமோ 5:17-18ரோம 15:27உபா 12:191 கொரி 9:9-14மத் 10:10 ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 2 கொரி 9:6ஓசி 10:12யோபு 4:8ரோம 2:6-101 கொரி 15:33நீதி 11:18நீதி 1:31எபே 5:6 தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். ரோம 8:13யாக் 3:182 பேது 2:19ஓசி 10:13யோபு 4:8கலா 6:7ரோம 6:21-22ரோம 13:14 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம். 1 கொரி 15:582 தெச 3:13ஏசா 40:30-31எபி 10:35-39எபி 12:31 பேது 2:15யாக் 5:71 பேது 3:17 ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம். எபி 13:16நீதி 3:271 தெச 5:15தீத் 3:8மத் 25:40லூக் 6:35எபி 6:103 யோவா 1:5-8
விருத்தசேதனமல்ல, புதிய படைப்பே
என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள். 1 கொரி 16:21-23ரோம 16:22 சரீரத்தின்படி நல்லவர்களைப்போலக் காணப்படவிரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார்கள். கலா 5:112 கொரி 11:13அப் 15:1கொலோ 2:23கலா 2:3லூக் 16:152 கொரி 10:12அப் 15:5 விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள். பிலி 3:31 கொரி 5:62 பேது 2:19ரோம 2:17-252 கொரி 11:18மத் 23:15மத் 23:31 கொரி 3:21 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். ரோம 6:6கலா 2:20எரே 9:23-241 கொரி 2:2பிலி 3:3ரோம 1:16கலா 5:242 கொரி 12:10-11 கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். 2 கொரி 5:17கொலோ 3:10-11எபே 2:10கலா 5:6எபே 4:241 கொரி 7:19ரோம 2:28ரோம 8:1 இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக. கலா 3:29பிலி 3:3ரோம 9:6-8கலா 3:7-91 பேது 2:5-9ரோம 4:12ஓசி 1:10ரோம 2:28-29 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன். 2 கொரி 1:5கொலோ 1:242 கொரி 11:23-252 கொரி 4:10கலா 5:11-12எபி 12:15யோசு 7:25கலா 1:7 சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென். 2 தீமோ 4:22ரோம 16:202 கொரி 13:14பிலே 1:25வெளி 22:21ரோம 16:23