கொலோசெயர் 3

Colossians 3
அத்தியாயம் 3

பரிசுத்த ஜீவியத்திற்கான விதிமுறைகள்

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். ரோம 8:6மத் 6:332 கொரி 4:18கொலோ 3:2மத் 6:20சங் 73:25-26எபி 12:2கலா 2:19-20 பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள். 1 யோவா 2:15-171 நாளாக 22:19கொலோ 3:1மத் 16:23ரோம 8:4-6மத் 6:19சங் 119:36-37கொலோ 3:5 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கலா 2:20ரோம 6:2கொலோ 2:20யோவா 5:24ரோம 8:2ரோம 5:101 பேது 1:3-52 கொரி 5:14 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். 1 யோவா 3:2யோவா 11:25கலா 2:201 பேது 1:13பிலி 3:21யோவா 17:241 பேது 5:4வெளி 22:14 ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள். ரோம 8:13கலா 5:19-21கலா 5:241 பேது 2:11ரோம 6:131 கொரி 6:9-10எபே 5:3-61 கொரி 6:18 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். எபே 5:6ரோம 1:181 பேது 1:14எசேக் 16:45-46ஏசா 57:4வெளி 22:152 பேது 2:14எபே 2:2-3 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். எபே 2:21 பேது 4:3-4ரோம 6:19-20தீத் 3:31 கொரி 6:11கொலோ 2:13ரோம 7:5 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். எபே 4:29எபே 4:22யாக் 1:20-21எபே 5:4கொலோ 3:5எபே 4:26எபே 4:31-32எபி 12:1 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, எபே 4:22எபே 4:25லேவி 19:11ரோம 6:6யோவா 8:44வெளி 22:15செப்ப 3:13வெளி 21:27 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. எபே 4:23-24ரோம 12:2கொலோ 3:12எபே 2:102 கொரி 5:17சங் 51:10எசேக் 11:19கொலோ 3:14 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். கலா 3:28-291 கொரி 12:13ரோம 10:12எபே 3:6எபே 1:23ரோம 9:24-26ரோம 3:29கலா 5:6 ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; எபே 4:32எபே 4:21 யோவா 4:192 பேது 1:5-8கலா 5:22-23கொலோ 3:102 பேது 1:10யாக் 3:17-18 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபே 4:32மாற் 11:25யாக் 2:13எபே 4:2மத் 6:14-15ரோம 15:1-2லூக் 6:35-37லூக் 17:3-4 இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். 1 பேது 4:8எபே 5:21 கொரி 13:1-13கொலோ 2:2யோவா 13:34ரோம 13:8எபே 4:31 யோவா 4:21 தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். யோவா 14:27பிலி 4:6-7ஏசா 26:3ரோம 15:13சங் 29:111 தெச 5:18கொலோ 3:17ரோம 5:1 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; சங் 119:11எபே 5:19யோவா 15:7ரோம 10:17எரே 15:161 யோவா 2:24எபி 4:12-13உபா 6:6-9 வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 1 கொரி 10:31கொலோ 3:23நீதி 3:6எபே 5:201 தெச 5:181 பேது 4:111 பேது 2:5எபி 13:15

கிறிஸ்தவ குடும்பத்திற்கான விதிமுறைகள்

மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். எபே 5:22தீத் 2:4-51 கொரி 11:31 பேது 3:1-6ஆதி 3:161 தீமோ 2:12எஸ்த 1:201 கொரி 14:34 கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 1 பேது 3:7ஆதி 2:23-24எபே 5:25கொலோ 3:21எபே 5:28-29எபே 5:33எபே 4:31நீதி 5:18-19 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது. யாத் 20:12எபே 6:1-3நீதி 6:20மத் 15:4-6மத் 19:19உபா 27:16லேவி 19:3நீதி 30:17 பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள். நீதி 4:1-4எபே 6:4சங் 103:13நீதி 3:121 தெச 2:11எபி 12:5-11 வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள். எபே 6:5-71 தீமோ 6:1-2கலா 1:101 பேது 2:18-19தீத் 2:9-101 தெச 2:4கொலோ 3:20பிரச 5:7 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, கொலோ 3:17எபே 6:6-7ரோம 14:82 நாளாக 31:21பிரச 9:101 பேது 2:151 பேது 2:13சங் 119:10 எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள். எபே 6:8அப் 20:32கலா 1:101 கொரி 7:22லூக் 14:14எபி 10:35எபே 6:6எபி 11:6 அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை. அப் 10:34ரோம 2:112 கொரி 5:10உபா 10:171 தெச 4:6எபே 6:91 பேது 1:172 நாளாக 19:7