பிலிப்பியர் 3

Philippians 3
அத்தியாயம் 3

சரீரத்தின்மேலுள்ள நம்பிக்கை

மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும். பிலி 4:4ரோம 5:11யாக் 1:21 பேது 4:131 தெச 5:16எபே 6:10யோவே 2:23பிலி 4:8 நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். 2 கொரி 11:13தீத் 1:16வெளி 22:15ஏசா 56:10-112 தீமோ 3:1-6கலா 5:15பிலி 3:19சங் 22:16 ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். கொலோ 2:11உபா 30:6ரோம 7:6கலா 6:13-15ரோம 8:15கலா 5:25ரோம 2:25-29யோவா 4:23-24 சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம். 2 கொரி 11:18-22 நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; 2 கொரி 11:22ரோம 11:1அப் 23:6அப் 22:3அப் 26:4-5ஆதி 17:12யோவா 7:21-24லூக் 1:59 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். கலா 1:13-14அப் 8:3அப் 26:9-10அப் 22:3-4அப் 26:5மத் 5:20ரோம 9:31-321 கொரி 15:9 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். லூக் 14:33மத் 16:26மத் 13:44-46லூக் 14:26நீதி 13:8பிலி 3:8-10லூக் 17:31-33ஆதி 19:17 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். எரே 9:23-24ரோம 8:18அப் 20:24பிலி 3:7யோவா 17:3பிலி 3:102 பேது 1:31 கொரி 2:2 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், 2 கொரி 5:211 கொரி 1:30கலா 2:16ரோம 4:13-15ரோம 4:5-6ரோம 1:17ரோம 8:1ஏசா 53:11 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், கலா 2:201 பேது 4:1-22 தீமோ 2:11-12ரோம 8:17ரோம 6:3-11எபே 1:19-211 பேது 4:13-141 யோவா 2:3 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன். லூக் 20:35-36வெளி 20:5அப் 23:6அப் 26:72 கொரி 11:3எபி 11:351 கொரி 9:221 கொரி 9:27

இலக்கை நோக்கி ஓடுதல்

நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன். 1 தீமோ 6:11-122 பேது 1:5-8சங் 138:8ஓசி 6:31 பேது 3:11-132 கொரி 7:1ஏசா 51:1எபி 13:21 சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி, லூக் 9:62எபி 12:1-2பிலி 3:121 கொரி 9:24-27சங் 27:4பிலி 3:8எபி 6:1பிலி 4:11-13 கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். 1 கொரி 9:241 பேது 5:10வெளி 3:212 தீமோ 4:7-8ரோம 8:28-301 தெச 2:122 பேது 1:3எபி 3:1 ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். யோவா 7:171 கொரி 2:6கலா 5:10நீதி 2:3-6யாக் 1:4-5கொலோ 4:121 கொரி 14:20மத் 5:48 ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக. கொலோ 2:6வெளி 3:3வெளி 2:4-5கலா 6:16எபி 10:38-39பிலி 1:27ரோம 15:5பிலி 2:2 சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள். பிலி 4:91 கொரி 4:161 பேது 5:31 தீமோ 4:12எபி 13:72 தெச 3:72 தெச 3:91 கொரி 10:32 ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். எபே 4:17ஏசா 8:11கலா 6:12கலா 1:7கலா 2:14எரே 13:171 தெச 4:62 பேது 2:10 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ரோம 16:18ரோம 8:5-72 பேது 2:3கொலோ 3:22 கொரி 11:15யூதா 1:12-132 பேது 2:12 கொரி 11:12 நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எபே 2:19கொலோ 3:1-32 கொரி 4:18எபி 12:221 பேது 1:3-42 தீமோ 4:8எபே 2:61 தெச 1:10 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். 1 யோவா 3:2கொலோ 3:41 கொரி 15:42-56ரோம 8:29யோவா 11:24-26ஏசா 26:19மத் 17:2மத் 28:18