கள்ளப்போதகர்களும், அவர்களுடைய அழிவும்
கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். மத் 7:15யூதா 1:4உபா 13:1-32 தீமோ 4:3மத் 24:112 பேது 2:3கலா 2:41 கொரி 11:19 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். ரோம 2:24யூதா 1:10மத் 24:242 பேது 2:151 பேது 2:12அப் 16:17அப் 24:14யூதா 1:15 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது. 2 கொரி 2:17உபா 32:35ரோம 16:181 தெச 2:5யூதா 1:151 தீமோ 6:5தீத் 1:111 பேது 5:2 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; யூதா 1:6மத் 25:41ரோம 8:32வெளி 20:1-3வெளி 12:7-9ஏசா 14:12வெளி 20:10எசேக் 7:4 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; 2 பேது 3:6எபி 11:7யூதா 1:14-15லூக் 17:26-271 பேது 3:19-20ஆதி 7:1-24மத் 24:37-39ஆதி 6:1-8 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; யூதா 1:7லூக் 17:28-30உபா 29:23ஆதி 19:24-25எண் 26:101 கொரி 10:11ஏசா 13:19எரே 50:40 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, ஆதி 19:16ஆதி 19:29ஆதி 19:7-8ஆதி 13:13ஆதி 19:221 கொரி 10:132 பேது 3:17எரே 23:9 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; சங் 119:158எசேக் 9:4சங் 119:1361 தீமோ 1:9நீதி 25:26யாக் 5:16மல்கி 3:15-17நீதி 28:12 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். சங் 34:15-191 கொரி 10:13வெளி 3:102 தீமோ 3:12யூதா 1:14-152 பேது 3:72 கொரி 5:10-11யோபு 5:19 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். யூதா 1:16யூதா 1:10யாத் 22:28யூதா 1:182 பேது 3:3ரோம 1:24-27எபே 5:5யூதா 1:4 அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே. யூதா 1:92 தெச 1:7தானி 6:22சங் 103:20சங் 104:4 இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். யூதா 1:10எரே 12:32 பேது 2:19கலா 6:8சங் 92:6எரே 10:21எரே 10:8எரே 4:22 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; ரோம 13:13ரோம 2:8-9எபி 2:2-3பிலி 3:191 பேது 4:4எபே 5:27யூதா 1:12-161 தெச 5:7-8 விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். 2 பேது 2:32 பேது 2:18எபே 2:32 பேது 3:16எபே 4:14ரோம 16:181 கொரி 11:19யோவா 5:44 செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, வெளி 2:14யூதா 1:11உபா 23:4-5எண் 22:5-7எண் 31:16நெகே 13:2மீகா 6:52 பேது 2:13 தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. எண் 22:21-33அப் 26:11பிரச 7:25பிரச 9:3ஓசி 9:7லூக் 16:11அப் 26:24-25 இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. யூதா 1:12-13எபே 4:14எரே 14:32 பேது 2:4ஓசி 6:4யோபு 6:14-17யூதா 1:6மத் 22:13 வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள். 2 பேது 2:20யூதா 1:15-16ரோம 13:13யாக் 5:52 பேது 1:42 தெச 2:4வெளி 13:5-6அப் 2:40 தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. யோவா 8:34ரோம 6:16-22கலா 5:1கலா 5:131 பேது 2:16தீத் 3:3ரோம 6:12-142 பேது 2:20 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். எபி 10:26-27எபி 6:4-8பிலி 3:19லூக் 11:24-26உபா 32:29மத் 12:43-452 பேது 1:42 பேது 2:18 அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும். எசேக் 18:24எபி 6:4-6யாக் 4:17எசேக் 3:20லூக் 12:47யோவா 15:221 தெச 4:2யோவா 9:41 நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது. நீதி 26:11