கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளான ஐக்கியம்
எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து, கொலோ 1:10பிலி 1:271 தெச 2:121 தெச 4:1-22 பேது 1:31 கொரி 4:162 தீமோ 1:92 தெச 1:11 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, கொலோ 3:12-131 கொரி 13:71 கொரி 13:4-5மத் 11:29ரோம 15:1கலா 5:22-231 தீமோ 6:11மத் 5:3-5 சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். 1 கொரி 1:10கொலோ 3:13-151 கொரி 12:12-13யோவா 13:34ரோம 14:17-19எபி 12:142 கொரி 13:11யோவா 17:21-23 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; எபே 2:18ரோம 12:4-51 கொரி 12:4-131 கொரி 12:20எபே 1:18எபே 4:1கொலோ 1:5எபி 6:18-19 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 1 கொரி 8:61 கொரி 12:131 பேது 3:21ரோம 3:30கலா 3:26-28மத் 28:191 கொரி 1:13யூதா 1:3 எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர். ரோம 11:361 கொரி 8:6மல்கி 2:10கலா 3:26-281 யோவா 3:24கலா 4:3-7யோவா 20:17வெளி 4:8-11 கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. 1 பேது 4:10ரோம 12:31 கொரி 12:7-11எபே 3:2ரோம 12:6-81 கொரி 12:28-30யோவா 3:34எபே 3:8 ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். சங் 68:18கொலோ 2:151 சாமு 30:26எஸ்த 2:18நியாயாதி 5:12 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? யோவா 3:13மத் 12:40நீதி 30:4யோவா 6:33சங் 63:9யாத் 19:20ஆதி 11:5எபி 2:9 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார். எபி 7:26எபி 4:14எபே 1:20-23கொலோ 2:9எபி 9:23-241 தீமோ 3:16கொலோ 1:19மத் 24:34 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், எரே 3:151 கொரி 12:28-29எபே 2:202 தீமோ 4:5அப் 20:28மத் 28:20ரோம 10:14-15எபே 4:8 பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், 1 தெச 5:11-14எபே 4:161 கொரி 12:27ரோம 15:141 கொரி 14:4-5ரோம 14:191 கொரி 14:261 கொரி 14:12 அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். கொலோ 1:28யோவா 17:21எபே 4:3எபே 4:51 கொரி 14:202 பேது 3:18எபி 5:14எரே 32:38-39 நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், எபி 13:9ரோம 16:17-181 கொரி 14:201 யோவா 4:1எபி 5:12-14யாக் 1:62 கொரி 2:17எபே 6:11 அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார். 1 யோவா 3:18எபே 4:25சகரி 8:161 பேது 1:222 பேது 3:181 பேது 2:2எபே 1:22ரோம 12:9 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. கொலோ 2:19யோவா 15:5கொலோ 2:21 கொரி 13:13எபே 4:15எபே 4:121 தெச 2:131 தீமோ 1:5
ஒளியின் பிள்ளைகளாக வாழ்தல்
எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். ரோம 1:211 பேது 4:3-41 தெச 4:1-2கொலோ 3:5-8எபே 2:1-32 பேது 2:18கொலோ 2:41 பேது 1:18 அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து; மத் 13:15எபே 2:12ரோம 1:21-23யோவா 12:401 தெச 4:52 கொரி 4:4யாக் 4:4கொலோ 1:21 உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். கொலோ 3:5ரோம 1:24-261 தீமோ 4:2யூதா 1:111 பேது 4:32 பேது 2:12-14வெளி 18:32 பேது 2:22 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. தீத் 2:11-14யோவா 6:45மத் 11:291 யோவா 2:272 கொரி 5:14-15லூக் 24:47ரோம 6:1-2 இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 1 யோவா 5:20எபே 1:13எபி 3:7-81 யோவா 5:10-12யோவா 14:17கொலோ 2:7யோவா 10:272 கொரி 1:20 அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு, ரோம 6:6எபி 12:1யாக் 1:211 பேது 2:1-2எபி 3:13கொலோ 3:7-9தீத் 3:3எபே 4:25 உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, ரோம 12:2ரோம 8:6சங் 51:10கொலோ 3:101 பேது 1:13எசேக் 36:26தீத் 3:5எபே 2:10 உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள். கொலோ 3:10-142 கொரி 5:17எபே 2:10ரோம 13:14எபே 6:11ரோம 6:42 கொரி 3:182 கொரி 4:16 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும். கொலோ 3:9சகரி 8:16நீதி 12:22ரோம 12:5எபே 4:15நீதி 12:17நீதி 8:7நீதி 12:19 நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்; யாக் 1:19சங் 4:4சங் 37:8எபே 4:31-32பிரச 7:9நீதி 14:29நீதி 19:11ரோம 12:19-21 பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம். யாக் 4:71 பேது 5:8எபே 6:16எபே 6:112 கொரி 2:10-11அப் 5:3 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும். 1 தீமோ 6:181 தெச 4:11-12கலா 6:10யாத் 20:152 தெச 3:11-122 தெச 3:6-8லூக் 21:1-4சகரி 5:3 கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள். கொலோ 4:61 தெச 5:11பிரச 10:12நீதி 15:7கொலோ 3:8-9மத் 12:34-37நீதி 25:11-12சங் 37:30-31 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள். 1 தெச 5:19ஏசா 63:10எபே 1:13-14அப் 7:51ஆதி 6:6ரோம 8:23ரோம 8:11ஏசா 43:24 எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும். கொலோ 3:8பிரச 7:9தீத் 3:2-31 பேது 2:1யாக் 1:19கொலோ 3:19யாக் 3:14எபே 4:26 ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோ 3:12-13மத் 6:14-15மாற் 11:251 பேது 3:8-92 கொரி 2:10எபே 5:1லூக் 6:37லூக் 6:35