நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன். 2 கொரி 1:232 கொரி 13:102 கொரி 12:20-211 கொரி 4:212 கொரி 2:41 கொரி 2:21 கொரி 5:32 கொரி 1:15-17 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? 2 கொரி 7:81 கொரி 12:262 கொரி 1:14ரோம 12:152 கொரி 11:29 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன். கலா 5:102 கொரி 8:22பிலே 1:212 தெச 3:42 கொரி 7:121 கொரி 4:212 கொரி 1:152 கொரி 12:11 அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன். 2 கொரி 7:12நீதி 27:5-6லேவி 19:17-18லூக் 19:41-442 கொரி 11:22 கொரி 7:8-9பிலி 3:18சங் 119:136
பாவிகளுக்கு மன்னிப்பு
துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன். 1 கொரி 5:12-131 கொரி 5:1-5கலா 4:12கலா 5:10நீதி 17:25 அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். 1 கொரி 5:4-51 தீமோ 5:202 கொரி 13:102 கொரி 7:11 எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும். எபே 4:32கலா 6:1-2கொலோ 3:13ஏசா 28:7நீதி 17:221 கொரி 15:541 தெச 4:132 கொரி 5:4 அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன். யூதா 1:22-23கலா 5:13கலா 6:10கலா 6:1-2 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன். 2 கொரி 10:6பிலே 1:212 கொரி 7:12-15பிலி 2:222 கொரி 8:242 தெச 3:14உபா 13:3உபா 8:16 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். யோவா 20:232 கொரி 5:201 கொரி 5:4மத் 18:18 சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை. 1 பேது 5:8எபே 6:11-122 கொரி 11:32 கொரி 4:4லூக் 22:31வெளி 12:9-112 கொரி 11:14மத் 4:10
புதிய உடன்படிக்கையின் ஊழியம்
மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது, அப் 16:8அப் 14:27கொலோ 4:31 கொரி 16:9வெளி 3:7-8அப் 20:1-6அப் 20:8ரோம 1:1 நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன். 2 கொரி 12:182 கொரி 7:5-62 கொரி 8:162 கொரி 8:232 கொரி 8:62 தீமோ 4:10கலா 2:1கலா 2:3 கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். எபே 5:2ரோம 8:372 கொரி 2:15-162 கொரி 9:15ரோம 6:17கொலோ 2:15சங் 106:47உன்னத 1:3 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். எபே 5:21 கொரி 1:18எசேக் 20:41பிலி 4:18ஆதி 8:212 தெச 2:10யாத் 29:182 கொரி 4:3-4 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்? 2 கொரி 3:5-61 பேது 2:7-8யோவா 9:39லூக் 2:341 கொரி 15:10அப் 13:45-47அப் 20:26-272 கொரி 12:11 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். 2 கொரி 4:22 கொரி 1:122 பேது 2:1-32 தீமோ 4:3-41 தீமோ 4:1-3மத் 24:241 கொரி 5:8எரே 23:27-32