சர்தை சபைக்கு தூதனின் செய்தி
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய். 1 தீமோ 5:6யாக் 2:26கொலோ 2:13வெளி 1:4யூதா 1:12லூக் 15:24வெளி 2:19எபே 2:5 நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை. வெளி 16:151 பேது 4:71 பேது 5:82 தீமோ 4:1-4ஏசா 35:3அப் 20:28-31மாற் 13:33-372 நாளாக 25:2 எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய். வெளி 2:52 பேது 3:101 தெச 5:2மத் 24:42-43வெளி 16:15லூக் 12:39-401 தெச 5:4-6எபி 2:1 ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள். வெளி 3:5வெளி 7:9பிரச 9:8வெளி 6:11வெளி 7:13-14வெளி 19:14வெளி 3:18வெளி 4:4 ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன். மத் 10:32வெளி 21:27லூக் 12:8வெளி 20:15வெளி 17:8வெளி 20:12சங் 69:28வெளி 13:8 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது. வெளி 2:7
பிலதெல்பியா சபைக்கு தூதனின் செய்தி
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது; ஏசா 22:22மத் 16:19வெளி 1:18யோபு 12:14யோவா 14:6லூக் 1:32மாற் 1:24ஏசா 41:14 நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 1 கொரி 16:9கொலோ 4:3வெளி 3:7பிலி 4:132 கொரி 2:12அப் 14:27லூக் 12:9வெளி 2:13 இதோ, யூதர்களாக இல்லாதிருந்தும் தங்களை யூதர்கள் என்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாக இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன். ஏசா 60:14வெளி 2:9ஏசா 49:23ஏசா 45:14ஏசா 43:4சகரி 8:20-231 சாமு 2:36எஸ்த 8:17 என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன். 2 பேது 2:9வெளி 14:12தானி 12:10சகரி 13:91 கொரி 10:13வெளி 2:101 பேது 4:12மத் 6:13 இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு. யாக் 1:12வெளி 22:12வெளி 2:10வெளி 2:252 தீமோ 4:81 பேது 5:3-42 தீமோ 2:5வெளி 22:20 ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். வெளி 22:4வெளி 21:2வெளி 14:1கலா 2:9எரே 1:18வெளி 2:17எபி 12:22சங் 48:8 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது. வெளி 2:7
லவோதிக்கேயா சபைக்கு தூதனின் செய்தி
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; கொலோ 1:15வெளி 1:52 கொரி 1:20கொலோ 1:18வெளி 3:7வெளி 22:13வெளி 19:11ஏசா 65:16 உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். ரோம 12:11மத் 6:241 இராஜா 18:21யாக் 1:8வெளி 2:4சங் 81:11-13மத் 24:12நீதி 23:26 இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். வெளி 2:5சகரி 11:8-9எரே 14:19எரே 15:1-4 நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; நீதி 13:7ரோம 7:24ஓசி 12:8வெளி 2:9வெளி 16:15லூக் 1:53உபா 8:12-14மத் 9:12 நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். வெளி 16:151 பேது 1:7ஏசா 55:1வெளி 19:8மல்கி 3:3மத் 13:44வெளி 7:13சங் 32:8 நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. நீதி 3:11-121 கொரி 11:32எபி 12:5-11யோபு 5:17வெளி 2:5எரே 31:182 கொரி 7:11எரே 10:24 இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான். லூக் 12:36-37வெளி 19:9யோவா 14:21-23மத் 24:33உன்னத 5:2-4லூக் 17:8 நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன். 2 தீமோ 2:12மத் 19:28வெளி 2:26-27யோவா 16:33வெளி 2:71 கொரி 6:2-31 யோவா 5:4-5லூக் 22:30 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார். வெளி 2:7வெளி 2:11வெளி 2:17வெளி 3:13வெளி 3:6